[Untitled]‎ > ‎

23.12.16- இன்றைய ராசி பலன்..(23.12.2016)

posted Dec 22, 2016, 5:37 PM by Habithas Nadaraja 

மேஷம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தொட்டது துலங்கும் நாள்.  

ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். புகழ், கௌரவம் கூடும் நாள்.        சிம்மம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புகூடும். நெருங்கிய வர்களுக்காக சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கன்னி: காலை 11.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிர்பார்த்தவை தாமதமாகும். நண்பகல் முதல் குடும்பத்தில் அமைதி திரும்பும். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தடைகள் நீங்கும் நாள். 
துலாம்: காலை 11.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.  
விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். சிறப்பான நாள். தனுசு: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணம் வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.  


மகரம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 

கும்பம்: காலை 11.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை முடிப்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். மகிழ்ச்சி தங்கும் நாள்.     மீனம்:  காலை 11.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக் கூற வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.

Comments