[Untitled]‎ > ‎

24.01.17- இன்றைய ராசி பலன்..(24.01.2017)

posted Jan 23, 2017, 5:51 PM by Habithas Nadaraja 
மேஷம்: மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மாலை 5.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள். 


மிதுனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள். கடகம்:  புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.சிம்மம்: எதிர்பார்த் தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பயணங்களால் பயனடை வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். சகோதரர்களால் உதவிகள் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.


துலாம்சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 


விருச்சிகம்: மாலை 5.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்கா மல் இருப்பது நல்லது. பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளி ப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலி ருந்து தடைகள் உடைபடும் நாள். 


தனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திட வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 5.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். மகரம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமை யான நாள்.


கும்பம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரர்களின் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.  மீனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன் படுத்திக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்ப ர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
Comments