[Untitled]‎ > ‎

24.01.18- இன்றைய ராசி பலன்..(24.01.2018)

posted Jan 23, 2018, 5:08 PM by Habithas Nadaraja




மேஷம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.






ரிஷபம்:திட்டமிட்ட வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.







மிதுனம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.







கடகம்:தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.







சிம்மம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.







கன்னி:சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப்படுவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.







துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.







விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.







தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கனவு நனவாகும் நாள்.







மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.







கும்பம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.






                                        

மீனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
Comments