[Untitled]‎ > ‎

24.08.18- இன்றைய ராசி பலன்..(24.08.2018)

posted Aug 23, 2018, 7:10 PM by Habithas Nadarajaமேஷம்: எதிர்பார்ப்புகள்  நிறைவேறும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரபலங்கள் உதவுவார்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப் போராட்டங்கள் ஓயும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாக மான நாள்.  மிதுனம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும் பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சிறுசிறு அவ மானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வளைந்து  கொடுத்து செல்ல வேண்டிய நாள்.  


கடகம்:தன் பலம் பலவீனத் தை உணருவீர்கள்.சகோதர வகையில் உதவி கள் கிடைக்கும். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


சிம்மம்:சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள். 


கன்னி:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள். துலாம்:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பணப்பற்றாக்குறை நீடித் தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.   விருச்சிகம்:சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசால்அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள். 
தனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.  


மகரம்:ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். மற்றவர்களை சார்ந்து  இருக்க  வேண்டாம். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


கும்பம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களால் டென்ஷன் அதிக ரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 

                                        

மீனம்:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். சகோதரங்களால்பயனடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
Comments