[Untitled]‎ > ‎

25.02.16- மகத்துவம் நிறைந்த மாசிமகம்.

posted Feb 24, 2016, 10:31 PM by Liroshkanth Thiru
மாசிமாதம் முழுவதும் விடியற் காலையில் எழுந்து புனிதநீர் நிலைகளில் நீராடினால் விரும்பியபலன்களைப் பெறலாம் எனவேத நூல்கள் (பவிஷ்ய புராணம், பாகவதம், பகவத்கீதை மற்றும் இதரபுராணங்கள்) கூறுகின்றன.

அதற்குக் காரணம்,பூவுலகில் எத்தனையோபுனிதநதிகளும்,புண்ணியதீர்த்தங்களும் உள்ளன. அத்தீர்த்தங்கள் எல்லாம் தம்மில் நீராடுபவர்களின் பாவங்களைஏற்று,அவர்களுக்குபுண்ணியநதிகளில் நீராடுவதுஏழேழுபிறவிகளுக்கும் நன்மைதரக்கூடியது. ஆதனால் தான் பக்தர்கள் தீர்த்தயாத்திரைசெல்வதும் அங்குபித்துருதர்ப்பணம் செய்வதும் உத்தமமாககருதுகின்றனர்.

ஆனால் புனிதநதிகள் எல்லாவற்றையும் தரிசித்துநீராடுவதுஎல்லோராலும் இயலாதகாரியம். ஆயினும்,நம் முன்னோர்கள் எல்லோரதுநன்மைகளையும் கருதிசிலவழிமுறைகளைஎமக்கு இலகுவாக்கிதந்துள்ளனர். அதற்குஏதுவாகஅமைகிறதுமாசிமகதீர்த்தவாரிதிருவிழாக்கள்.

மாசிமாதமகநட்சத்திரத்தைமிகவும் விசேடமாககொண்டாடுவதற்குமுக்கியகாரணம் என்னவெனில்,அன்றையதினம் பூமியிலுள்ளநதிகளும். பூமிக்குஅடியிலுள்ளசரஸ்வதிபோன்றநதிகளும் ஒன்றுசேர்கின்றனவாம்.

அன்றையதினம் மற்றவர்களுக்குபாவவிமோசனம் அளிக்கின்றநதிகள் எல்லாம் தம்மில் சேருகின்றபாவத்தை இறைவனின் திருமஞ்சனமாட்டலாலும். சாதுக்கள்,சன்னியாசிகள் மற்றும் பாகவதஉத்தமர்களின் ஸ்நானத்தாலும் மீண்டும் புனிதம் அடைகின்றனவாம்.

அதனால் தான் மாசிமகத்திற்குஅவ்வளவுசிறப்புசேர்கிறது. அப்படிப்பட்டநன்நாளில் நாமும் புனிதநதிகள்,நீர் நிலைகள்,கோவில் அருகிலுள்ள புஸ்கரணிகள் (கேணி) மற்றும் சமுத்திரத்தில் நீராடி,அறிந்தும் அறியாமலும் நாம் செய்கின்றபாவங்களைப் போக்கலாம். புனிதநீர் நிலைகளில் ஒன்றுதான் கங்கை. வேதங்கள் போற்றும் கங்கையின் புனிதத்தைப் பற்றிபகவான் கிருஷ்ணர் மகாபாரதத்தில் துரியோதனனுக்கு கூறும் அறிவுரைகளில் ஒன்று,“சுத்தம் பாகிரதி ஜாலம்”என்றுஅதாவதுபகிரதமன்னனின் பிரயத்தனத்தாலேபூமிக்குகொண்டுவரப்பட்டவிஷ்ணு பாததீர்த்தமே“கங்கை”எனபோற்றப்படுகிறது. அதுமட்டுமல்ல,பாரதயுத்தத்தின் இறுதியில் அம்புப்படுக்கைகளில்வீற்றிருக்கும் பிதாமகரானபீஷ்மச்சாரியார் பாண்டவபுத்திரரானதருமருக்குபுனிதநதிகளின் புண்ணியங்களைப் பற்றியும் தர்மஉபதேசம் செய்தார்.

அப்படிப்பட்டஉத்தமமானநதிகளில் எளிமையாககங்கையில் நீராடும் வழியைஎல்லோருக்கும் நம் முன்னோர்கள் காட்டித் தந்துள்ளனர். அதுதான் “சமுத்திரஸ்நானம்”ஆகும். (சமுத்திரக்குளியல்) இந்தசமுத்திரத்தைசாகரம் என்றும் கூறுவோம். இந்தசாகரத்தில் கங்கைநீர் கலந்துபுனிதப்படுத்தியகதையைஅறிவோம்.

நேர்மையும்,சத்தியமும் தவறாதமன்னன் அரிச்சந்திரனின் வம்சத்தில் வந்தவர்தான் சகரன் எனும் மன்னன். இவருக்கு இரு மனைவியர். மூத்தாளுக்குஒருபுத்திரனும் இளையாளுக்குஎண்பதுஆயிரம் புதல்வர்களும் இருந்தனர். துவறாததர்மத்தினால் அரசாண்டமன்னன் உலகமக்களின் நன்மைக்காக அஸ்வமேதயாகம் ஒன்றுசெய்யத் தொடங்கினார்.

இந்தயாகத்தைகேள்வியுற்ற இந்திரன் யாகத்தைகுழப்பும் நோக்குடன் யாகக் குதிரையைக் கவர்ந்துசென்றுபாதாளலோகத்தில் கபிலரின் ஆச்சிரமத்தில் கட்டிவிட்டுசென்றுவிட்டான்.யாகக் குதிரையைகாணாதமன்னனின் யாகம் இடைநிறுத்தவேண்டியதாயிற்று. எனினும்,மன்னனின் இளையாளின் எண்பதாயிரம் புதல்வர்கள் தந்தையின் யாகத்தைத் தொடருவதற்காகயாகக் குதிரையைதேடிஎல்லா இடமும் சென்றனர். குதிரையைகாணாததால் பாதாளம் சென்றுதேடுவதற்காகஆங்காங்கேசிறுகுழுக்களாய் பிரிந்துபூமியைக் குடையத் தொடங்கினர். 

பாதாளம் சென்றசகரர்கள்,கபிலமுனிவரின் ஆச்சிரமத்தில் யாகக் குதிரை இருப்பதைப் பார்த்ததும் கபிலமுனிவரேதிருடியதாகஎண்ணியோகநிஷ்டையில் இருந்தமுனிவரை இம்சித்தனர். இதனால் கடும் கோபம் கொண்டமுனிவர் சகரபுத்திரர்களைதன் பார்வையால் பஸ்மம் ஆக்கிவிட்டார்.

சுகரபுத்திரர்களால் குடையப்பட்டபூமியேபின்னர் மழைநீராலும் மற்றையநதிகளாலும் நிரம்பியதால் சாகரம் (சமுத்திரம்) என்றுஅழைக்கப்பட்டது. சுகரமன்னனின் முதல் மனைவியின் பிள்ளையின் பிள்ளையான (பேரன்) அஞ்சுமான் எனும் மன்னன் தன் சிற்றப்பன்மார்களைஎங்கும் தேடிச் சென்றான். பாதாளலோகத்தில் அவர்களுக்குநடந்தகதியைக் கேள்வியுற்றான். பாதாளம் சென்றமன்னன் கபிலமுனிவரிடம் நடந்தசம்பவங்களைஅறிந்துமன்னிப்புக் கேட்டுயாகக் குதிரையைமீட்டான். ஆத்துடன்,தன் முன்னோர்களுக்குசாபவிமோசனவழியும் கேட்டான். முனிவரும் விஷ்ணுபாததீர்த்தமாகியகங்கையில் அவர்களதுசாம்பல் கரைந்தால் மட்டுமேஅவர்கள் நற்கதிஅடைவார்கள் என்றுஉபாயமும் கூறிமன்னனையாகம் தொடரஆசீர்வதித்தார்.யாகம் இனிதேநடைபெற்றது. ஆனால்,அஞ்சுமானால் தன்சிற்றப்பன்மார்களுக்குவிமோசனம் கிடைக்கச் செய்யமுடியவில்லை.

அஞ்சுமானின் கொள்ளுப்பேரன் பகீரதன் எனும் மன்னன் தன் மூதாதையரின் சாபவிமோசனத்துக்காகவிஷ்ணுவை நினைத்துகடும் தவம் இயற்றினான். பகவான்விஷ்ணுவும் மன்னனின் தவவலிமையைமெச்சி,சகரபுத்திரர்களின் சாபம் நீங்ககங்கையைபூமிக்குஅனுப்புவதற்குதயாரானார். வுpஷ்ணுபாததீர்த்தமாகியகங்கைஆகாயத்திலிருந்துநேரடியாகபூமிக்குவந்தால் அதன் வேகத்தில் பூமிஅழிந்துவிடும் என்பதைஉணர்ந்தபிரம்மா,பூமிக்குஅதிபதியானசிவனிடம் சென்றுமுறையிட்டார். கருணாமூர்த்தியானசிவனும் பூமாதேவியின் நன்மைகருதி,கங்கையைதன் சிரசில் தாங்கிதரித்து,அதன் வேகத்தைகுறைத்துபூமிக்குஅனுப்பினார். இதனால் தான் சிவபெருமானும் “கங்காதரர்”எனும் நாமம் பெற்றார்.

இவ்வாறுபூமிக்குவந்தகங்கை,பூமியிலுள்ளநீர் நிலைகள் மற்றும் சாகரத்திலும் கலந்துபாதாளம் வரைசென்றுசகரர்களின் சாம்பலைக் கரைத்தது. பகீரதமன்னனின் பித்துருக்களுக்;கு சாபம் நீக்கியது. இதனால் தான் இறந்தோரின் அஸ்திமற்றும் பித்துருதர்ப்பணங்களைக் கடற்கரையில் செய்துஅதனைசமுத்திரக்கடலில் கரைப்பதுசிறந்நததாகும்.

ஆகவே,கங்காஸ்நானத்தைமாசிமகத்தன்றுசமுத்திரத்தில் கடைப்பிடித்தாலேபோதும். உன்னதபலன் கிட்டும்.அன்றையதினம் விடியற்காலையில் சமுத்திரத்திற்குசென்றுவடக்குமுகமாகநின்றுகொண்டுமுதலில் சமுத்திரநீரின் அடியில் சிறிதுமண்ணைஎடுத்துசிரசிலும் உடம்புமுழுவதிலும் சற்றுபூசிவிட்டுநீரைத் தொட்டபடிகீழ் கண்டமந்திரத்தைஉச்சரித்தபின்,பகவான் விஷ்ணுவின் திருவடிகளைநினைத்துஅவனதுதிருநாமங்களைஉச்சரித்தப்படி மூன்றுமுறை மூழ்கிஎழுதல் வேண்டும். இவ்வாறுசெய்தால் உத்தமபலன் கிட்டும். அவ்வாறுசமுத்திரம் செல்லமுடியாதவர்கள் வீட்டுக் குளியலின் முன்னர் சிறிதுநீரைஒருபாத்திரத்தில் எடுத்துகீழ்கண்டமந்திரத்தைஉச்சரித்தபின் அந்நீரைபகவான் நாமங்களைச் சொல்லிஊற்றிக் கொண்டாலேநற்பலன் கிடைக்கும். கீழேதரப்பட்டநதிகளைநினைத்தபடிமந்திரத்தைஉச்சரித்தாலேஅந்தநீர் புனிதமாகும். மற்றும் கங்காதீர்த்தத்தைசிறிதுபருகினாலும் புண்ணியம் உண்டு. கோவில்களில் இறைவனின் அபிஷேக தீர்த்தமும்,கோசலமும் கங்கைநீருக்குஒப்பானதாகும். தர்ப்பைப் புல்லானதுபுனிததீர்த்தங்களுக்குசமமானது.

“ஓம் கங்கேசயமுனேசைவகோதாவரி
சரஸ்வதி
நர்மதைசிந்துகாவேரி ஜலேஸ்மின் 
சந்நிதம் குரு”

மற்றும் தினமும் நாம் பகவத் கீதையில் ஒருசுலோகத்தைப் படித்தாலும் அதனைக் கேட்டாலும் கங்கையைசிறிதுபருகியபுண்ணியம் உண்டுஎனகுலசேகரமன்னன் விஷ்ணுதுதியில் கூறுகிறார். இவர் பன்னிருஆழ்வார்களில் ஒருவர். இதுமட்டுமல்ல,எளிமையாகபகவானின் திருநாமங்களைஉச்சரித்தாலேகங்காஸ்நானம் முதற்கொண்டுசகலசௌபாக்கியங்களும் கிடைக்குமெனவேதவியாசர்,சைதன்யமகாபிரபுவும் மற்றும் ஆழ்வார்களும் வழிகாட்டியுள்ளனர். நாம் இருந்த இடத்திலிருந்தபடியே இவ்வாறானபேறுகளைப் பெறவழிசமைத்தஎம்முன்னோர்களுக்குநாம் மிகவும் கடமைப்பட்டவர்களாகுவோம்.

தினமும் உச்சரியுங்கள். மகிழ்ச்சியும் செல்வமும் தரும் மந்திரம்.

“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராமராமராம ஹரே ஹரே”

இவ்வண்ணம்,
கருடாகிருஷ்ண பக்திகழகம்
ஸ்ரீ மகாவிஷ்ணுநாககன்னிஅம்மன் ஆலயம்,
ஏரிக்கரைவீதி,சந்திவெளி.
 

Comments