[Untitled]‎ > ‎

25.05.19- இன்றைய ராசி பலன்..(25.05.2019)

posted May 24, 2019, 7:15 PM by Habithas Nadaraja


மேஷம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.








ரிஷபம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.






மிதுனம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.







கடகம்:உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.







சிம்மம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.







கன்னி:பிஸியாக இருப்பது போன்றே தோற்றமளிப்பீர்கள். ஆனால், உங்களே நீங்கள் ஏமாற்றிக் கொள்வது உண்மை தானே! தெளிவான முடிவுகளை எடுப்பதில் மெகா சொதப்பல் செய்யும் நீங்கள், தவறுகளை திருத்திக் கொள்ள முன்வருவதில்லை.







துலாம்:அனைத்திலும் வளத்துடன் காணப்படும் நீங்கள், உடல் நலத்தில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சனி பகவானை வேண்டிக் கொண்டு பணிகளை துவக்குங்கள். தலையாய கடமையை முடிக்க ஆர்வம் காட்டுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.







விருச்சிகம்:தனிமையை விரும்பும் விருச்சிக ராசிகாரர்களே, இது மிகவும் முக்கியமான காலக்கட்டம். அனுகூலமான விஷயங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வருமே தவிர, மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்து வைத்துக் கொள்ள நினைத்தால் வேலைக்கு ஆகாது.







தனுசு:குடும்பத்தினரிடம் உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அடுத்து வரும் நாட்கள் உங்கள் முன்னேற்றத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இருப்பினும், பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.







மகரம்:எண்ணங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். நிதானமாக செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். கல்வியால் உங்கள் தரம் உயரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.







கும்பம்: சமூகம் என்ன நினைக்கும் என்று கவலைப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டாம். சிறிய சிறிய சறுக்கல்கள் உங்களுக்கு பாடமே தவிர, தோல்வி கிடையாது. எழுந்து ஓடுங்கள். தனியாத் தாகத்தை ஒரு சில முயற்சிகளில் தணித்துக் கொள்வீர்கள்.






                                        
மீனம்:உங்களது சில சுயநல சிந்தனைகளால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். தவறான பழக்கவழக்கம் உங்களுக்கு வீழ்ச்சியாக அமையலாம். கிரக மாற்றங்களின் தன்மைக்கு ஏற்ப உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படும். மிகவும் சுமாரான நாள் இன்று.
Comments