[Untitled]‎ > ‎

25.09.15- இன்றைய ராசி பலன் (25.09.2015)..

posted Sep 24, 2015, 6:50 PM by Liroshkanth Thiru   [ updated Sep 24, 2015, 6:51 PM ]
மேஷம்

நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை உருவாக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.

ரிஷபம்

கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம்

சவால்களைச் சமாளிக்க வேண்டிய நாள். எதிரிகள் விலகுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

கடகம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். குடும்பச் செலவுகள் கூடும். வீண்பயம் உருவாகலாம். விலையுயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.

சிம்மம்

கலகலப்பாகப் பேசிக் காரியம் சாதித்துக் கொள்ளும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். கைகொடுத்துதவ நண்பர்கள் காத்திருப்பர். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும்.

கன்னி

ஆரோக்யம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

துலாம்

உதிரி வருமானங்கள் பெருகும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.

விருச்சகம்

பிரதோஷ வழிபாட்டால் பெருமை வந்து சேரும் நாள். வீடு கட்டி குடியேற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பயணங்களால் பலன் உண்டு.

தனுசு

மனநிம்மதி கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள்.

மகரம்

சிவாலய வழிபாட்டால் சிந்தை மகிழும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும்.

கும்பம்

தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்துதவுவர். அடிப்படை வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

மீனம்

நந்தி வழிபாட்டால் நலம் சேரும் நாள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம்.



Comments