[Untitled]‎ > ‎

26.01.19- இன்றைய ராசி பலன்..(26.01.2019)

posted Jan 26, 2019, 1:35 AM by Habithas Nadarajaமேஷம்:குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலி ருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள். ம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள். 


 ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள் ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் உதவு வார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புதுமை படைக்கும் நாள்.  மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடை வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.  கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டு வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.சிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங் குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய யோசனைகள் பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக் கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.  கன்னி:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டிவரும். இதை முதலில் முடிப் பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா வதில் 
தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின்குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள். 
துலாம்:கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கையா ளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதரவகையில் பிணக்குகள் வரும். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்பு கள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.  


விருச்சிகம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நெருங்கியவர்களை சந்தித்துஎதிர்காலம் குறித்து ஆலோசிப் பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.   தனுசு: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றிக் கொள் வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில்உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள். மகரம்:உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். கும்பம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போதுகொஞ்சம் டென்ஷனாவீர்கள்.நல்ல வாய்ப்புகளையெல் லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபா ரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

                                        
மீனம்:உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
Comments