[Untitled]‎ > ‎

26.01.20- இன்றைய ராசி பலன்..(26.01.2020)

posted Jan 25, 2020, 5:36 PM by Habithas Nadaraja


மேஷம்:உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல் பட்டு வெற்றி பெறுவீர்கள். உணர்ச்சி பூர்வமாகவும்,  அறிவுபூர்வமாகவும் செயல்படுவீர்கள்; பேசுவீர்கள். திடீர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியா பாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். உத்தி யோகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சாதிக்கும் நாள்.








ரிஷபம்: குடும்பத்தில் அமைதி யான சூழல் நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக் கும். உறவினர் கள் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் மேலதி காரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.






மிதுனம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.  வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் தேவையற்ற பிரச் சனைகள் வந்து நீங்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.







கடகம்: மனைவி வழியில் உங்களுக்கு தேவையான ஆதாயம் கிடைக்கும்.  உங்கள்  திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களால்  உதவி கிடைக்கும். வியாபாரத்தால் வாடிக்கை யாளர்களால் ஆதாய முண்டு. உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.







சிம்மம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங் களின்  அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.







கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக் கும். கனவு நனவாகும் நாள்.







துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயா ருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பால்ய நண்பர்களால்  உதவிகிடைக்கும். யோகா தியானம் எனமனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்கு தாரர்க ளால் ஆதாயமுண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.







விருச்சிகம்:தைரியமாகவும் திட்டவட்டமாகவும் சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல் படுத்துவீர்கள். சகோதரிகளால் ஆதாயம்உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வெற்றிக்கு வித்திடும் நாள்.







தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் . நீண்ட நாளாக வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள் விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள் மகிழ்ச்சியான நாள்.







மகரம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும்தன்னைப் புரிந்துக் கொள்ள வில்லை என ஆதங்கப்படுவீர்கள்.  வியாபாரத் தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது.பொறுமை தேவைப்படும் நாள்.







கும்பம்: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.






                                        
மீனம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் புகழ் கூடும். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.
Comments