[Untitled]‎ > ‎

26.02.17- இன்றைய ராசி பலன்..(26.02.2017)

posted Feb 25, 2017, 6:57 PM by Habithas Nadaraja



 
மேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். இனிமையான நாள். 






ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சாதிக்கும் நாள். 







மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். உறவினர்கள் உதவுவார்கள். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.







கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங் களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சாலை களை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.







சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். 








கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். திடீர் யோகம் கிட்டும் நாள். 







துலாம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் அன்புத் தொல்லை குறையும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதுமை படைக்கும் நாள். 







விருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளை களால் ஆறுதல் அடைவீர்கள். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். வெளி வட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.  







தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள். 








மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். 






கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பான்மை தலைத் தூக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். 







மீனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். போராடி வெல்லும் நாள்.

Comments