[Untitled]‎ > ‎

27.04.17- இன்றைய ராசி பலன்..(27.04.2017)

posted Apr 26, 2017, 6:42 PM by Habithas Nadaraja



 மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.  உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். 







ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது  முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். போராடி வெல்லும் நாள்.    
    

    





மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி  அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.  
  






கடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலி தமாகும் நாள்.     







சிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.       
       







கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர  முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.   






துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  நன்மை கிட்டும் நாள்.   







விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். 







தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.  







மகரம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 







கும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவி னர்கள் மதிப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள். 







மீனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

Comments