[Untitled]‎ > ‎

27.07.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(27-07-2015முதல்02-08-2015வரை)

posted Jul 26, 2015, 6:34 PM by Unknown user
       மேஷம்

1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28மாணவர்களுக்கு கல்வியல் மிகுந்த கவனமுடன் பயின்னு வருதல் நல்லது. உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகும்.நெடு நாட்களாகத் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.ஜீலை29,30,31 தொழிற்சாலைகள் மற்றும் இருப்பிடங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் பிரயாசையின் பேரில் இடங்களை மாற்றி அமைப்பீர்கள்.குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் சச்சரவுகளும் வந்து போகும்.. உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பணம் மற்றும் பொருட் செலவுகள் ஏற்படும்.வேலை இல்லாத படித்தவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.ஆகஸ்ட்1,2விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களையும் சலுகைகளையும் பெறுவார்கள். இனிப்பு பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்கள்,முதியோர் இல்லங்களை நடத்துவோர்கள்,கம்யுட்டர்,நிலவளத்துறைசார்ந்தவர்கள்,மீன்,முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.

         ரிசபம்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28,29பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள்.
திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாக தன வரவுகள் உண்டாகலாம்.ஜீலை30,31உறவினர்களால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாக் கூடிய காலமாகும்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளுக்காக மற்றவர்களை நம்பி பணம் பொருட்களை கொடுத்துஏமாற்றம் அடைய வேண்டாம்.பொருளாதாரம் சுமாராக காணப்படும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் மூலம் நற்பலன் அடைவார்கள்.கணவன் மனைவியின் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.ஆகஸ்ட்1,2பொதுத் தொண்டு நிறுவனத்
தினர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிசளை நாடிச் செல்லுவீர்கள். காணாமற் போன பொருட்கள் திரும்ப கை வந்து சேரும். தேவையில்லாமல் மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு வீண் மனக் குழப்பங்கள் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் செய்து வரவும்.

      மிதுனம்

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28,29குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது. செய் தொழில் சம்பந்தமாகப் புதிய கூட்டு முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் உகந்ததாகும்.மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.ஜீலை30,31உடம்பில் இரத்த சம்பந்தமான உபாதைகள் வந்து போக வாய்ப்புகள் உள்ள காலமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டு இருந்த திட்டங்கள் நிறை வேறக் கூடிய காலமாகும்.மற்றவர்களுக்காக உதவி செய்வதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சிறிது முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.ஆகஸ்ட்1,2உத்தியோகம் பார்பவர்களுக்கு எதிர் பார்த்து இருந்த அரசு உதவித் தொகைகள் கிடைப்பதோடு நினைத்த இடங்களுக்குப் பணி இட மாற்றமும் ஏற்படக் கூடிய காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து பச்சை ஆடை தானம் செய்து வரவும்.

       கடகம்

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28நாட்பட்ட தீராத வியாதிகள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள்.அரசியல் வாதிகளிடம் இருந்து ஆதாயங்களைப் பெறுவீர்கள்.குழந்தைகளுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கலாம். வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.ஜீலை29,30,31ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்~;டம் மூலமாகப் பணம் வந்து சேரும் காலமாகும்.புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பூ பழம் நறுமணப் பொருட்கள் ஆகியன வியாபாரம் செய்வோர்கள்,கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணிகளை செய்வோர்கள்,அற
நிலையத் துறை சார்ந்தவர்கள், மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவீர்கள். யாத்திரையில் மிகு கவனமுடன் பயணம் செய்யவும். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை.ஆகஸ்ட்1,2மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மனநிம்மதிஅடைவீர்கள். குடும்பத்தில் திருமண விசயமாக காரணமில்லாத சிற்சில மனக் கசப்புகள் வந்து போகும்.மாணவர்கள் கல்வியில் நினைத்தகல்லூரிகளில் பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும்..வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்க்கும் பொருட்டு பொருட் செலவுகள் உண்டாகலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை செய்து வுரவும்.

       சிம்மம்

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும்.மின்சாரம் அடுப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் கையாளுதல் நல்லது.துலை தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஜீலை28,29,30,31அரசியல் வாதிகளால் எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்கால தாமதம் ஆகலாம். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது. யாத்திரையில் சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாக சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. ;..இரும்பு, இயந்திரம், இரசாயனம்,பழைய பேர்பர் மற்றும் பிளா~;டிக் போன்ற பொருட்களின் வியாபாரிகள்,எண்ணை வியாபாரிகள்,அலுவலக உதவியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.புதிய வீடு மாற்றங்களைச் செய்ய முயற்சிப்பீர்கள்.ஆகஸ்ட்1,2உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர் பாராத பொருட் செவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில ஆதாயங்கள் அடைவீர்கள். உடல் நிலையில் வாய்,வயிறு முதுகு வலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். புதிய ஆடை அணிகலன் வாங்குவதைத் தள்ளிப் போடவும்.பிள்ளைகளால் எதிர் பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து நீல ஆடை தானம் செய்யவும்.

        கன்னி

6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை27,28பூர்வீகச் சொத்து விசயங்களில் மற்றவர்களின் உதவியால் கை வந்து சேரும்.தந்தை மகன் உறவுகளில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்து போகலாம். கல்வித் துறையில் மாணவர்களுக்கு நல்ல மதிப் பெண்களும் பாராட்டுக்களும் கிடைக்கும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழிற் செய்வதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.ஜீலை29,30,31வராத பணம் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாக பேசி பழகுவதால்வீண் பிரச்சனைகள் வராமல்தடுக்கலாம்.மாணவர்கள் கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களுக்கு நற் பெயரும் மற்றும் புகழும் உண்டாகும்.ஆகஸ்ட்1,2காவல் துறை, இராணுவம் தீயணைப்பு போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,தங்கநகை வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். நீண்ட காலமாகப் பிரச்சனைகள் உண்டாகிப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் திரும்ப ஓன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்யவும்.

        துலாம்

7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28ரேஸ் லாட்டரி மூலம் திடீர் தன வரவுகள் ஏற்படலாம்.அநாதைச் சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவடைவீர்கள். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.யாத்திரையில் மிகவும் கவனமுடன் இருக்கவும்.மீன்,முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் மிகவும் லாபம் அடைவார்கள்.ஜீலை29,30,31ஆசஸ்ட்1
மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.தாய் வழிச் சொந்த பந்தங்களின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். வீடு வாகனங்களை வாங்குவதற்கும் மற்றும் தொழிற் சாலைகளின் அபி விருத்திக்காக நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கைக்கு வந்து சேரும் காலமாகும்.ஆகஸ்ட்2; விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலன்களைச் செய்யும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிகளைச் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடவும். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்களை அடைவீர்கள்.காதல் விசயங்களில் எதிர் பார்த்த செய்திகள் சற்று கால தாமதமாகவே கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்து வரவும்.

  விருச்சிகம்

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28பிள்ளைகளால் பொருள் வரவுகளும் மனநிம்மதியும் மற்றும் அவர்களுக்கு பரிசு பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.வழக்கு விசயங்களில் எதிர்பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.காய்கறிகள்,இலை போன்ற பொருட்களின் வியாபாரிகள்,மர வியாபாரம் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.கணவன் மனைவி உறவுகளில் நல்ல மன மகிழ்ச்சி உண்டாகும் ஜீலை29,30,31வேண்டாத விசயங்களில் தலையிட்ட வீண் மனச் சிக்கலை விலைக்கு வாங்க வேண்டாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக புதிய கடன் வாங்குவதற்குஹ்ன முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி வந்து சேரும். உடல் நிலையில் கண் காதுகளில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்;து வேறுபாடுகள் தீர்ந்து மன நிறைவுகளை அடைவீர்கள்.தாயின் உடல் நிலை பாதிப்புகள் இன்னும் சிலகாலம் வரை நீடிக்கும். ஆகஸ்ட்1,2தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,பேப்பர் மற்றும் அச்சுத் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,காய்கரி இலை கீரை பருப்பு சம்பந்தமான உணவு பொருட்களின் வியாபாரிகள்,சினிமா,நாடகம் போன்ற கலைத் துறைகளைச் சார்ந்தவர்கள்,
மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன்களை தரும் வாரமாகும்.

இ.ராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பச்சை ஆடை தானம் செய்யவும்.

        தனுசு


9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். உடல் நிலையில் காது மற்றும் முதுகு சம்பந்தமான வலி போன்ற உபாதைகள் வந்து போகலாம்.. மற்றவர்களுக்காக சொத்து மற்று பண விசயங்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.ஜீலை29,30,31தண்ணிர்,
கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொரட்களின் வியாபாரிகள்,உப்பு,உரம் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்,கடல் வளத்துறை சார்ந்தவர்கள்,பூஜைப் பொருட்களின் வியாரிகள்,தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தை வழியிலான கிடைக்க வேண்டிய அரசியல் வுஹ்திகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவீர்கள்.ஆகஸ்ட்1,2புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்து சேரும்.குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்துள்ள மருத்துவ செலவுகள் சற்று குறையக் கூடிய காலமாகும்..ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். காதல் விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் காலமாகும். 

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் ஆலய வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வரவும்.

        மகரம்

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28,29தாயின் உடல் நலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். வழக்கு விசயங்களில் எதர் பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.. புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகுமாகையால் புதியகடன்கள் வாங்குவதை தவிர்க்கவும்.வீடு மற்றும் வாகனங்களை பழுது பார்ப்பதற்காக புதிய கடன் வாங்குவீர்கள். ஜீலை30,31உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். ஆடம்பர அலங்காரப் பொருட்கள விற்பனை செய்வோர்கள்;, கலைத்துறை சார்ந்தவர்கள்,படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு
கள் நடத்துபவர்கள்,ஆபரண வியாபாரிகள்,திருமண தகவல் மையங்கள் மற்றும் திருமண கூடங்களை நடத்துபவர்கள் கலைத் துறை சார்ந்த உதவிப் பணி செய்வோர்கள், கலை கல்லூரி மாணவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள்,நறு மணப் பொருள்கள்,பூஜைப் பொருட்களின் வியாபாரிகள்,அற நிலையத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.ஆகஸ்ட்1,2உற்றார் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.வேற்று மத்தவர்களால் வெளி நாடு செல்லுதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வரவும்.

        கும்பம்

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27,28பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.பிறருக்காக சொத்துக்கள் மற்றும் பண விசயங்களுக்குச் ஜாமீன் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.ஜீலை29,30,31வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்கும். விவசாயம் செய்பவர்கள் கவனமுடன் இருப்பது உகந்ததாகும்.பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதைச் சற்று தள்ளிப் போடுவது நல்லது. வெளி நாடுகள் சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர் பாத்த ஆதாயம் உண்டாகும்..யாத்திரையின் போது கை மற்றும் கால்களில் மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாகப் பயணம் செய்வது நல்லதாகும்.. ஆகஸ்ட்1,2கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வெளி நாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நணபர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேர வாய்ப்பு உள்ள காலமாகும்.அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இ.ராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.

         மீனம்

12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை27நண்பர்களால் காரணமற்ற பொருட் செலவுகள் வந்து சேரலாம்.உடம்பில் வாயு வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். குடும்பத்தில் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது.கணவன் மனைவி இடையே இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று கால தாமதமாகவே தீரும்.ஜீலை28,29,30,31காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற் பெயர் எடுப்பீர்கள்.புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சி
களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.ஆகஸ்ட்1,2கட்டிட சம்பந்தமாகிய செங்கல்,மணல்,கல்,சிமிண்ட் போன்ற பொருட்கள் விற்பனை செய்வோர்கள், அழகுக்கலை கூடங்களை நடத்துபவர்கள், சினிமா நாடகம் போன்றவற்றை சார்ந்தவர்கள், நறுமணப் பொருட்களை விற்பனை செய்வோர்கள்,கார் லாரி ஆடு மாடு போன்ற வாகனங்களை வியாபாரம் செய்பவர்கள்,கலைக் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். சமுதாயத்தில் பழுது பட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வரவும். 

தொடரும்!
                                                                                          நன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி  IBAM, RMP,DISM
         தமிழ்நாடு, இந்தியா

Comments