[Untitled]‎ > ‎

27.09.14- நான்காம் நாள் நவராத்திரியின் லக்ஷ்மி பூஜை ஆரம்பம்..

posted Sep 26, 2014, 8:26 PM by Unknown user   [ updated Sep 27, 2014, 10:06 AM ]

செல்வத்திற்கு அதிபதியான திருமகளை (லக்ஷ்மி) ஸ்ரீமத் நாராயணனே வைகுண்டத்தில் வைத்து பூஜிப்பதாக சொல்லப்படுகின்றது. பிரமாவும் சிவனும் கூட தேவியை வழிபடுவதாக புராணங்கள் கூறுகின்றன.

தேவாதி தேவர்களும் வழிபடும் இந்த திருமகளை இந்த நவராத்திரியின் நான்காம் நாளான இன்று நாம் வழிபடல் வேண்டும்.

பெண்கள் விரதமிருந்து லஷ்மி தேவியை ஆராதித்து வில்வஇலை, செண்பகப்பூ, செந்தாமரை, ரோஜா, கதம்ப மலர்களால் பூஜைகள் செய்து மகாலஷ்மி அஷ்டோத்ரம் சகஸ்ரநாம பாராயணங்கள் செய்யப்பட்டு, சக்கரைப் பொங்கல் பால் கற்கண்டு நைவேத்தியமாகப் படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்குதல் சிறப்பைத் தரும்.

மகா லஷ்மிதேவியை மனமுருக பூஜிப்பதன் பலனாக நம் வீடுகளில் செல்வம் பெருகும். இதைதான் பொருளில்லாதோர்க்கு இவ்வுலகில்லை என்பதாகும்.

மேலும் நான்காம் நாளாகிய இன்று லஷ்மி தேவிக்கான பாசுரங்களை பைரவி இராகத்தில் பாடி கறிச்சாதம். பொரியல் பிரசாதமாக படைத்து பழங்களில் கொய்யாப்பழமும் புஷ்பங்களில் ஜாதிமல்லிகையும். பத்திரங்களில் கதிர்ப்பச்சைகளால் அர்ச்சித்து இக்கலியுகத்தில் செல்வ வளம் மிக்கவர்களாக வாழ்வோமாக.
Comments