[Untitled]‎ > ‎

27.09.15- இன்றைய ராசி பலன் (27.09.2015)..

posted Sep 26, 2015, 7:03 PM by Liroshkanth Thiru
மேஷம்

மால்மருகன் வழிபாட்டால் மகிழ்ச்சி காண வேண்டிய நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

முருகப்பெருமானை வழிபட்டு முன்னேற்றம் காண வேண்டிய நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பணியாளர் தொல்லை அகலும்.

மிதுனம்

செந்தில்வேலன் வழிபாட்டால் சிறப்புகளைக் காண வேண்டிய நாள். மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பிள்ளைகள் வழியில் சிறு விரயம் உண்டு.

கடகம்

வடிவேலன் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். சில பிரச்சினைகளை கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. வாய் வார்த்தையில் நிதானம் தேவை. ஓய்வில்லாமல் உழைத்தாலும் நிறைவு இருக்காது.

சிம்மம்

கோவில் வழிபாட்டால் குதூகலம் காணும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். திருமணத் தடை அகலும். காணாமல் போன பொருளன்று கைக்கு கிடைக்கும்.

கன்னி

மலைபோல் வந்த துயரங்கள் பனி போல் விலகும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். கடன் சுமை குறையும். நேற்றைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.


துலாம்

பவுர்ணமி வழிபாட்டால் பணவரவு கூடும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் பெருகும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லைகள் அகலும்.

விருச்சகம்

மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். வங்கிகளில் கரைந்த சேமிப்பை மீண்டும் ஈடுகட்டுவீர்கள். வியாபார விருத்தி ஏற்படும். தாய்வழி ஆதரவு கூடும்.

தனுசு

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றித் தடைகளை தகர்த்தெறிவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆலய வழிபாட்டால் அமைதி கூடும்.

மகரம்

கிரிவலம் வந்து கீர்த்தி காண வேண்டிய நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும்.

கும்பம்

சிவ குடும்ப வழிபாட்டால் சிந்தை மகிழும் நாள். செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். கடன் சுமை குறையும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலனில் கவனம் தேவை.

மீனம்

சுப்ரமணியர் வழிபாட்டால் சுகங்கள் கூடும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ள திட்டமிடுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சினை சமாதானமாக முடியும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும்.


Comments