[Untitled]‎ > ‎

27.12.18- இன்றைய ராசி பலன்..(27.12.2018)

posted Dec 26, 2018, 5:45 PM by Habithas Nadarajaமேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.பிள்ளைகளின் தேவைகளைப்பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில்புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்:எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்களுடன்இனிமையான அனுபவங் களை பகிர்ந்து கொள்வீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.  உழைப்பால் உயரும் நாள்.   மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்றநிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். ெவற்றிக்கு வித்திடும் நாள்.    


கடகம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். செலவு களை குறைக்க திட்டமிடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  சிம்மம்:  ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராதசெலவுகள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். முயற்சிகள் சற்றுதாமதமாகும் நாள்.  


கன்னி: எடுத்த வேலைகளைமுழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளா வீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிசெய்வீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களைநம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.   


துலாம்:ராஜதந்திரமாக செயல் பட்டு காரியம் சாதிப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்துயோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைகூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.      விருச்சிகம்:எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள் வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள். 


தனுசு:குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நேர்மறை சிந்தனைப் பிறக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். 


மகரம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல்குழம்புவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. புது முதலீடுகளை தவிர்க்கவும்.வியாபாரத்தில் வேலையாட்களால்  டென்ஷன்ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.  கும்பம்:உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில்  வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கைஅதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 


                                        
மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டுஅதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்குசில ஆலோசனைகள் தருவீர்கள். அமோக மான நாள்.
Comments