[Untitled]‎ > ‎

28.06.20- இன்றைய ராசி பலன்..(28.06.2020)

posted Jun 27, 2020, 5:54 PM by Habithas Nadaraja


மேஷம்:பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீகசொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில்  உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.





 
ரிஷபம்:மற்றவர்களை நம்பிஎந்த விஷயங்களையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவு எடுப்பீர்கள்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் உத்தியோகத்தில் சில ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.






மிதுனம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.







 கடகம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்  தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.







சிம்மம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் மகிழ்ச்சியான நாள்.







கன்னி:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.







துலாம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போதுஅலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.







விருச்சிகம்:சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தால் புதுதொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சியால் வெற்றியடையும் நாள்.







தனுசு:பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







மகரம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில்  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.







கும்பம்:சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில்  பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.





                                        
மீனம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லது  நடக்கும் நாள்.
Comments