[Untitled]‎ > ‎

28.07.17- இன்றைய ராசி பலன்..(28.07.2017)

posted Jul 27, 2017, 6:55 PM by Habithas Nadaraja
 மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகார பதவியில்  இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில்  அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.  


ரிஷபம்:   புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பர செலவு களை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்  கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள். மிதுனம்:  எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். தாயாருக்கு  மருத்துவ செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும்.  உழைப்பால் உயரும் நாள். கடகம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்மாமன் வழியில்  நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம்  கூடும் நாள்.  சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப் பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.  வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். உற்சாகமான நாள்.   கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உதவி கேட்டு  தொந்தரவுகள் அதிகரிக்கும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால்  அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


துலாம்:திட்டமிட்ட காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். உடன்பிறந்தவர்களால் வீண் டென்ஷன், மனக்கசப்பு வந்து நீங்கும். வாகனத்தை  இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட் களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களிடம்  விட்டுக் கொடுத்து போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


விருச்சிகம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில  முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள். தனுசு: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை  ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி  பெருகும் நாள்.மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணவரவு திருப்தி தரும். விலகி நின்றவர்கள் விரும்பி  வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் உங்களை மட்டம் தட்டினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.     
                                        

மீனம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். தன்னம்பிக்கை  துளிர்விடும் நாள்.
Comments

Comments