[Untitled]‎ > ‎

28.08.16- இன்றைய ராசி பலன்..(28.08.2016)

posted Aug 27, 2016, 7:29 PM by Habithas Nadaraja
மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். 

ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. மனநிறைவு கிட்டும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 


கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 


சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். இனிமையான நாள்.  


கன்னி: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்


துலாம்: குடும்பத்தில் கலகல ப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். 


தனுசு: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. திறமைகள் வெளி ப்படும் நாள். 


மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தொட்டது துலங்கும் நாள்.  


கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். கனவு நனவாகும் நாள். 

மீனம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கரு த்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புதுவழியில் யோசிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். எதிர் பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாள்.




Comments