[Untitled]‎ > ‎

28.11.19- இன்றைய ராசி பலன்..(28.11.2019)

posted Nov 27, 2019, 5:58 PM by Habithas Nadaraja


மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக. கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.ரிஷபம்:சந்திராஷ்டமம் தொடர்வதால், தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். வியாபாரத்தில், பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள். எதிர் பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.மிதுனம்: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதரர்கள், உங்கள் வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருப்பார்கள். வாகனத்தைச் சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தி யோகத்தில் , புது பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.கடகம்:வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.சிம்மம்:குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச்செலவுகளை குறைத்து,சேமிக்க தொடங்குவீர்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண்விவாதங்கள் வந்துபோகும்.பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்சினைத் தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.விருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக ,குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் நீங்கும். அழகும், இளமையும் கூடும். தள்ளிப் போன விஷயங்கள், உடனே முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய பாதை தெரியும் நாள்.தனுசு:ராசிக்குள் சந்திரன் இருப்பதால்,எடுக்கும் காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி இருக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களுடன். பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


மகரம்: எடுத்த வேலையை முடிப்பதில்,அலைச்சலும், தாமதமும்,உண்டாகும். பிள்ளைகளை,அன்பால் அரவணைத்துச் செல்வது நல்லது. வாகனப் பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில், மேலதிகாரியின் சொல்லுக்குக் கட்டுப்படுவது நல்லது. போராடி வெல்லும் நாள்.கும்பம்:ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுப்பொருள் வந்து சேரும். நண்பர் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை  வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


                                        
மீனம்:கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் வெற்றி கிடைக்கும் நாள்.
Comments