[Untitled]‎ > ‎

29.08.16- இன்றைய ராசி பலன்..(29.08.2016)

posted Aug 28, 2016, 6:28 PM by Habithas Nadaraja
மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உற வினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப்  பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள்  கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


ரிஷபம்:  துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந் தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து  நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள்  நிறைவேறும். வெற்றி பெறும் நாள். 


மிதுனம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தோல்விமனப்பான்மை யிலிருந்து விடுபடுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த  பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை  விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.


கடகம்:  ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண்  சந்தேகம் வந்துச் செல்லும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலை  நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.  திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.  


சிம்மம்: எதிர்காலம் பற் றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையால் பிறரி டம்  கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.  


கன்னி:  திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வரு வார்கள். சபைகளில் மதி க்கப்படுவீர்கள். பணவரவு கணிசமாக  உயரும். வியாபாரம் செழி க்கும். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.  


துலாம்:  உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் மனம் விட்டு  பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின்  நம்பிக்கை யைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமா கும் நாள்.


விருச்சிகம்:  கணவன்-மனைவிக்குள் அன்யோ ன்யம் பிறக்கும். வெளிவட் டாரத்தில் மதிப்பு, மரியா தைக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.  விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத் தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை  மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.   


தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய்  முடியும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்க ப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என  பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள்  தாமதமாகும்.வேலைச்சுமை மிகுந்த நாள். 


மகரம்:  பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுப்படுத்தி  கட்ட திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபார த்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப் புகள்  தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.     
    

கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை  முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக்  கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 


மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.  அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  கனவு நனவாகும் நாள்.




Comments