[Untitled]‎ > ‎

29.10.14- நவம்பர் மாத சோதிட தகவல்கள்..

posted Oct 28, 2014, 10:40 PM by Unknown user

நவம்பர் மாத அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க.

15.11.2014 – மாதஇறுதி வரை புதன் அஸ்தமனம் அடைவதால் குழந்தையின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் நாள் குறிப்பிடப்படவில்லை. மேலும் மாதஆரம்பம் – 26.11.2014 வரை சுக்கிரன் அஸ்தமனம் அடைவதாலும் 02.11.2014 – மாதஇறுதி வரை சனி அஸ்தமனம் அடைவதாலுமல் நாள் குறிப்பிடப்படவில்லை.

டிசம்பர் மாத அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க

திகதி      கிழமை         நேரம்                லக்கினம் 

03.12.2014    சனி     காலை 5.30 _ 7.00 வரை       விருச்சிகம். 
04.12.2014    ஞாயிறு  காலை 5.30 _ 7.00 வரை       விருச்சிகம். 
05.12.2014    திங்கள்  காலை 5.15 _ 6.45 வரை       விருச்சிகம். 
11.12.2014    ஞாயிறு  காலை 5.00 _ 6.30 வரை       விருச்சிகம். 
 
நவம்பர் மாதம் வைத்தியசாலை செல்ல கூடாத நாட்கள்.

01.11.2014  06.11.2014  07.11.2014  08.11.2014  10.11.2014  11.11.2014  14.11.2014  15.11.2014  16.11.2014  17.11.2014  19.11.2014  20.11.2014  21.11.2014  22.11.2014  23.11.2014  24.11.2014  25.11.2014  26.11.2014  29.11.2014  30.11.2014  

நவம்பர் மாத சுபதினங்கள் 

திகதி      கிழமை         நேரம்                லக்கினம் 

02.11.2014  ஞாயிறு       பகல்  11.37 -01.13        மகரம்.
12.11.2014  புதன்        பகல்  10.52 -12.04        மகரம். 
13.11.2014  வியாழன்     பகல்  10.53 -12.05        மகரம்.
19.11.2014  புதன்        பகல்  10.31 -11.43        மகரம். 
28.11.2014  வெள்ளி      பகல்  12.35 -01.23        கும்பம்.

டிசம்பர் மாத சுபதினங்கள் 

திகதி      கிழமை         நேரம்                லக்கினம் 

06.12.2014  சனி       பகல்  11.26 - 12.38           கும்பம்.
07.12.2014  ஞாயிறு    பகல்  10.40 - 12.16           கும்பம். 


நவம்பர் மாத சோதிட தகவல் 

சனிக்கு பயம் வேண்டாம்.
ஏழரைச்சனியில் முதல் இரண்டரை ஆண்டு விரயச்சனி யாகும். வுpரயச்சனி எதிர்பாராமலும், எதிர்பார்த்தும், திடீர் என செலவுகள் வரும். கஸ்டப்பட்டு சம்பாதித்தபணம் கரைந்து விட்டதே என்று மனம் கவலை  கொள்ளும்.  இதனால் தான்  விரயச்சனி என்றால் பயம் உண்டாகிறது. இரண்டாவது  இரண்டரை ஆண்டு ஜென்மச்சனி யாகும். ஜென்மச்சனியில் நோய் உடலை வாட்டும். நோய் தீர பணம் செலவாகும். ஆதனால் மனநிம்மதி குறைவாகும். இறுதி இரண்டரை ஆண்டு குடும்பச்சனி யாகும். குடும்பச்சனி  குடும்பத்தில் வேண்டாத விடயங்களில் பிரச்சனைகள் தேடிவரும்.  ஏழரைச்சனி வாழ்க்கையில் மூன்று முறை வரும்.  முதலாவது சனி தங்குசனி என்று பெயர். இது இலேசான தொந்தரவு இருக்கும். இத பெரும்பாலும் மாணவர் பருவத்தில் வருவதால் கல்வியை பாதிக்கும். இரண்டாவது சனி 30வயதுக்கு மேல்வரும். இதற்கு பொங்குசனி என்று பெயர். இது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும்;. வீடு வாகனம் நிலம் வாங்க வைக்கும். கஸ்டத்திலும் சுகம்அடவதால்இந்த சனியை எல்லோரும் விரும்புவார்கள். ரசிப்பார்கள். மூன்றாவது சனி 60வயதுக்கு மேல் வரும். இதற்கு மரணச்சனி என்று பெயர்.  இது மரணப்பிணியைத் தரும். மேலும் அட்டமத்துச்சனியும் தொந்தரவு அதிகமாக இருக்கும். 
       இந்த காலகட்டத்தில் வாழ்கையில் அமைதி பெற சனிக்கிழமைகளில் நல்லெண்ணைய் தேய்த்;து முழுகி தூய ஆடை அணிந்து ஆலயம் சென்று சனீஸ்வரனுக்கு நீலமலர்களால் அர்ச்சித்து இரும்பு சட்டியில் எள்எண்ணை எரித்து, எள்சாதம் நிவேதித்து, காகத்துக்கு உணவு வைத்து உண்டபின் உணவருந்த நன்மை உண்டாகும்.                                                                          

02.11.2014 இல் சனி மாற்ற பலன்.

மேடராசி: இம்மாதம் சனி அட்டமத்திற்கு 02.11.2014 இல் வருவதால் சொல்லொணாத் துயரத்தைத் தருவார். செய்தொழில் இடையூறு ஏற்படும். மேலதிகாரிகள் சீற்றம் அடைவார்கள். வீண் கெட்ட பெயர், இடமாற்றம் ஏற்படும். அளவிட முடியாத அளவில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத வகையில் கஸ்ட நிலை ஏற்படும். கவலை, வீண் அலைச்சல், விஷபயம், மரணபயம், பொருள் இழப்பு, நண்பர்களால் தொல்லை, குடும்பத்தினரிடம் மனத்தாங்கல், விரக்தி ஆகியவற்றை எதிர்பார்த்தே ஆகவேண்டும். ஆரோக்கியத்திலும் ஒரு சிறு பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு. அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உரிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்து நோய் முற்றிவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த நோயின் அறிகுறி தென்பட்டாலும் உடனடி சிகிச்சை தேவை. செலவுகள் அதிகமாகலாம். பண கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கை தேவை. வீண் விவாதம் கூடாது. பேச்சில் எச்சரிக்கை தேவை. சட்டபூர்வமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நன்மை ஏற்படலாம். சிறு தவறும் பெரிதாகிவிடும். தேவையில்லாத பகை உணர்வு, தேவையற்ற விரோதம், காரணம் இல்லாமல் சிலர் கோபிப்பார்கள். செலவு கட்டுக் கடங்காமல் போகும். திருமண வயதிலிருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாகும் அல்லது வேறு சில பிரச்சினைகள் தோன்றி பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். முறை தவறிச் செல்லவும் வாய்ப்புண்டு.

இடபராசி: இம்மாதம் சனி@ களத்திரதானத்திற்கு 02.11.2014 இல் வருவதால் இவ்வருடம் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். சொந்தபந்தங்கள் எதிரும் புதிருமாக இருப்பார்கள். உற்றார் உறவினருடன் ஒற்றுமை ஏற்படவாய்ப்பில்லை கடுமையான உழைப்பினை செலவிட வேண்டி வரும். செய்தொழிலுக்கு இடையூறுகள் வந்து சேரும். வெளியூர்ப் பிரயாணங்கள் அடிக்கடி ஏற்படும். ஆனால் அதிக நன்மைகள் ஏற்படாது. வயிற்றுவலி, மூட்டுவலி, எலும்புவலி, கழுத்து வலி, தைராய்ட்டுப் பிரச்சினை ஏற்படும். கெட்டசகவாசம் ஏற்படும். அதனால் வீண் கவலை ஏற்படும். குடும்பத்தில் உடல் நிலை பற்றிய கவலை இருந்து வரும். எச்சரிக்கையுடன் இருந்தால் பெரிய ஆபத்தைத் தடுக்கலாம். மணவாழ்க்கை எதிர்கொள்வோருக்கு மணவாழ்க்கை தாமதமாகும். அல்லது நிச்சயிக்கப்பட்ட குறிப்பிட்ட மாதத்தில் குறித்த திகதியில் நேரத்தில் திருமணம் நடைபெற முடியாதவாறு ஒரு சில பிரச்சினைகள் தோன்றும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். முறை தவறிச் செல்லவும் இடமுண்டு. புத்திரபாக்கியம் தாமதமாகும், தள்ளிப் போகும். தாய், தந்தை உடல் நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம், சொத்து, சம்பந்தமான பிரச்சினைகளைத் தரும். அதிக செலவுகள்; ஏற்படும். 

மிதுனராசி: இம்மாதம் சனி@ ரோகம், சத்துரு, கடன் தானமான 6 இற்கு 02.11.2014 இல் வருவதால் கடன் தொல்லைகள் அதிகமாகும். பகை ஓரளவு நீங்கும். தேகசுகம் பாதிக்கப்படும். வாய்வு பிடிப்பு, வாத சம்பந்தமான துன்பம், கை கால் எலும்பு முறிவு அல்லது சுழுக்கு, நரம்புத் தளர்ச்சி என்பன துன்பம் தரும். தவறி விழல், விபத்து என்பவற்றில் கவனம் தேவை. “கெட்டவன் கெட்டிட ராஜயோகமாம்” என்ற முதுமொழிக்கேற்ப தீயபலன் ஒழிந்து நற்பலன் ஏற்படும். செல்வச் செழிப்பு ஆரோக்கியம், அனைவருடனும் நல்லிணக்கம் ஆகியவற்றை பெறக்கூடிய ஆண்டு. ஒரு யோகமான வருடம் அதிஷ்டகரமான வருடம். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் அமையும். செய்தொழிலில் இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும். எதிரிகள் பணிவார்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் தனலாபம் ஏற்படும்.


கர்கடகராசி: இம்மாதம் சனி@ புத்திரர்; தாய்மாமன் தானமான 5 இற்கு 02.11.2014 இல் வருவதால்  இவ்வருடம் நிற்பதால்  புத்திரர் பாக்கியம் தாமதமாகும். புத்திரர் சுகக் குறைவு ஏற்படும். தொழில் முன்னேற்றம் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் முயற்சியில் உள்ளோருக்குத் தொழில் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு பெரிய முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். தொல்லைகள் அகலும். நோய்கள் அகலும். மணமாகாதவர்களுக்கு  தாமதமாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். எதிர்பாராத வகையில் சொத்துக்கள் சேரும். குடும்ப உறவு பாதிக்கப்படும். தாய் மாமனுக்கு தேக சுகம் பாதிக்கப்படும். முன்னேற்றம் தடைப்;படும். கஸ்ட நிலை காணப்படும் மாணவர்களுக்கு ஓரளவு நன்மை ஏற்படும். இருப்பினும் கல்விக்கேற்ப நன்மை கிட்டும். உயர் கல்வியில் பெரும் நன்மை ஏற்படும்.


சிங்கராசி: இம்மாதம் சனி;@ தாய், சுகத்தானமான 4இற்கு 02.11.2014 இல் வருவதால் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். நூதனமான நோய்கள் ஏற்படலாம். அலட்சியம் கூடாது. மனக்கவலை அளவுக்கதிகமாக இருக்கும். வரவுக்கு மேல் செலவு ஏற்படலாம். தாய்க்கு சுகக்குறைவு காணப்படும். செய்தொழில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு மறையும். வீடு, வாகனம், மனை,நிலம், பயிர் என்பன பலவிதமான கஸ்டங்களைத் தரும். குடும்ப உறவு நன்றாக அமையும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மத்திய கல்வியில் ஓரளவு கஸ்டநிலை காணப்படும்.  மத்திய கல்வியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி நன்றாக அமையும். 


கன்னிராசி: இம்மாதம் சனி@ இளையசகோதரம், போசனத்தானமான 3இற்கு 02.11.2014 இல் வருவதால் இவ்வருடம் விரோதிகள் அழிவார்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவ முன்வருவார்கள். உடல் ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். செலவுகள் குறைவடையும். பொருளாதார நிலை நல்ல நிலையில் காணப்படும். குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் தோன்றும். புத்திரருக்கு தேக சுகக்குறைவு ஏற்பட இடமுண்டு. எடுத்த காரியங்கள் வெற்றியை அளிக்கும். செய்தொழிலில் ஆதாயத்தைத் தரும். மனக்கவலைகள் அகன்று மகிழ்ச்சி ஏற்படும். மேற்படிப்புக்கு வசதி உண்டாகும். உதவியும் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு கல்வி நல்லபடி அமையும். உயர்கல்வியில் ஓரளவு மந்த நிலை காணப்படும். ஆனாலும் பாதிப்பு ஏற்படாது. இளையசகோதரர்கள் தேகசுகம் பாதிக்கப்படும். அதனால் செலவுகள் ஏற்படும். அலைச்சலும் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வரவேண்டி இருந்தால் கிட்டும். போசனத்தில் திருப்தி இன்மை ஏற்படும். அகாலபோசனம் கிட்டும.;


துலாராசி: இம்மாதம் தனம், வாக்கு, வித்தைதானத்திற்கு 02.11.2014 இல் சனி வருவதால் இவ்வருடம்  நிற்பதால் ஏழரைச்சனி கடைக்கூறு நடைபெறுகிறது. முன்பை விட துன்பங்கள் சிறிது சிறிதாகக் குறையும். மனக்கவலைகள் அகலும். வீண்செலவு, வீண் அலைச்சல் தொடர்ந்து கஸ்டம் தரும். குடும்பத்தில் மங்களகரமான சம்பவங்கள் நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். செய்தொழில் மாற்றம் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்க வழி பிறக்கும். தடைப்பட்டிருந்த தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். தொழிலில் நிலவிய தேக்க நிலை அகலும். தடைகள் அகலும். நிதி பற்றாக்குறை எனும் பேச்சுக்கு இனி இடமிருக்காது. பேச்சில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். வீண் வம்புகள் ஏற்பட இடமுண்டு. வாக்குறுதியில் அவதானம் தேவை. அரச ஊழியர்களுக்கு பகைமை அகலும். நன்மைகள் பல நடைபெறும். அரசாங்கத்திலே பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, உயர் பதவி, பாராட்டு என்பன கிடைக்கும். தொழிலை எதிர்பார்ப்போர் தொழில் கிட்டும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக்கப்போகிற ஆண்டு. தடைப்பட்ட கல்வி குறைவாக காணப்படும். 30 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு இரண்டாவது சனி பலத்த நன்மைகளைத் தரும். எதிர்;பாராத சந்தோசத்தைத் தரும். 65 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு மூன்றாவது சனி தேகசுகக் குறைவை யும் அதிக செலவையும் ஏற்படுத்தும். நீடித்த சுகக் குறைவாக காணப்படும். ஏழரைச்சனியில் கடைச்சனி நடைபெறுகிறது.

விருச்சிகராசி: இம்மாதம் சனி@ தேகம், குணம், லட்சணத்தானமான ஜென்மத் திற்கு 02.11.2014 இல் வருவதால் இவ்வருடம் உங்களுக்கு இவ்வருடம் சற்று கடினமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் கெடும். செய்தொழிலில் ஆதாயமும் உற்சாகமும் குறைவடையும். பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் போகும். வறுமை அளவு மீறியிருக்கும். நண்பர்கள் உறவினர்கள் விரோதம் ஏற்படும். குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நிகழலாம். பிரயாணங்கள் அவ்வளவு நல்ல பலனைத் தராது. குடும்பத்தில் அவ்வளவு கஸ்டம் இருந்த போதிலும் ஓரளவு மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவி உறவு நல்ல விதமாக அமையும். தீய சக்திகள் உறவில் ஊடுருவும். தீய நடத்தைகள் தீய வழிகள் காணப்படும். விஷபயம், மரணபயம் என்பன துன்பம் தரும்.ஏழரைச்சனியில் ஜன்மச்சனி நடைபெறுகிறது.


தனுராசி: இம்மாதம் சனி@ செலவு, தேசசஞ்சாரத்தானமான 12இற்கு 02.11.2014 இல் வருவதால் இவ்வருடம் உழைப்பிற்குக்  கிடைக்க வேண்டிய ஊதியத்தைக்கூட அரும்பாடுபட்டுத்தான் பெறவேண்டும். அரச ஊழியர்களுக்கு நன்மைகள் நடைபெறும். அதேசமயம் வேளைப்பளு அதிகரிக்கும். பணவிரயம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குலையும். மக்களால் கவலை ஏற்படும். நோய் தொல்லை தரலாம். ஆனால் நண்பர்கள் உறவினர்கள் உதவியாலும் ஆதரவாலும் மனதிற்கு ஒருவித நிம்மதி கிடைத்து வரும். செய்தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்தி கூடுமானவரை பொறுமையுடன் கண்காணித்துவர பெரிய இழப்புகளிலிருந்து விடுபடலாம். உடல்நலத்தை கவனத்துடன் கவனிக்க வேண்டும். மூன்றாவது சனியாயில் உடல் நலத்தில் கூடிய கவனம் தேவை. (60வயதுக்குப் பின்) இரும்பு சம்பந்தமான பொருட்களால் துன்பம் ஏற்படும். செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். மக்கள் உதவி புரிவார்கள். திருமணத்தை எதிர்கொள்வோருக்கு காலதாமதமாகும். கருமங்கள் கைகூடுவது கடினம்.  இழுபறி நிலை தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கம் குறையும். கல்வியில் ஊக்கம் தேவை. ஏழரைச்சனியில் முதல் கூறுச்சனி நடைபெறுகிறது. விரயச்சனியாக இருப்பதால் சேமிப்பு எல்லாம் செலவாக இடமுண்டு. செலவு அதிகமாகும். 


மகரராசி: இம்மாதம் சனி@ லாபம், மூத்த சகோதரத்தானமான 11இற்கு 02.11.2014 இல் வருவதால் எண்ணியவை கூடும். செய்தொழிலில் அதிக நன்மைகள், பொருள் சேர்க்கையும் கிட்டும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். உத்தியோ கத்தில் உயர்வு ஏற்படும். பொருளாதாரம் மந்தமடையும். கடும் உழைப்பால் பொருள் சேர்க்கை நன்றாக அமையும். நண்பர்கள் இயன்ற உதவிகளைச் செய்வர். பெரிய விபத்துக்கள் நடைபெற்றாலும் தீமைகள் எதுவும் பெரிய அளவில் ஏற்படாது. நன்மையும் தீமையும் சேர்ந்தே காணப்படும். புத்திரர் வழியில் பிரச்சினைகள் ஏற்படும். புத்திரர் எதிர்கொள்வோருக்கு புத்திரர் பாக்கியம் பின் தள்ளிப் போகும். சகோதரருக்கு கஸ்டநிலை காணப்படும். மூத்த சகோதரருக்கு அதிகஸ்டம், பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பரீட்சையில் சித்திகளும், பாராட்டுக்களும் பரிசில்களும் கிடைக்கும். திருமணத்தை எதிர்நோக்குவோருக்கு கடும்முயற்சி மூலம் கிட்டும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும்.


கும்பராசி: இம்மாதம் சனி@ தொழில்தானமான 10இற்கு 02.11.2014 இல் வருவதால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இருந்தும் கஸ்டநிலை ஏற்படும். சக ஊழியர்கள் எதிரிகளாவர். மேலதிகாரிகளின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டிவரும். தொழிலுக்காக செலவு ஏற்படஇடமுண்டு. லக்கினாதிபதியாக இருப்பதால் தொழில் கஸ்டம் குறைந்து நன்மைகள் அதிகமாகும். பணத் தட்டுப்பாடு குறையும். வாழ்க்கையில் முன்னேற்றங்களைச் சந்திப்பீர்கள். குடும்ப அங்கத்தினர்களினது ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். பொருளாதாரம், ஆரோக்கியம், குடும்பம் அனைத்தும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பசுகம் பாதிக்கப்படும். தாய்க்கு சுகக்குறைவு ஏற்படும் இதனால் அதிக செலவு ஏற்படும். திருமணத்தை எதிர்கொள்வோருக்கு தாமதமாகும். இழுபறிநிலை காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 


மீனராசி: இம்மாதம் இவ்வருடம் சனி@ பிதா, பாக்கியத்தானமான 9இற்கு 02.11.2014 இல் வருவதால் உத்தியோகத்தில் இருப்பவர்களாயினும் சுயதொழில் செய்பவர்களாயினும் தொழில் மேன்மை ஏற்படும் அல்லது மாற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு முதலியவை கிட்டும். தொழிலில் அவதானமும் உழைப்பும் தேவை. வெளியூர்ப் பிரயாணமும், கெட்ட பெயரும், பொருள் நட்டமும் ஏற்படும். குடும்பத்தில் சிலரை எச்சரிக்கையுடன் கவனித்து வரவேண்டும். அலட்சியம் கூடாது. பிதா சுகக் குறைவு ஏற்படலாம். பிதா வழி நன்மைகள் கிட்டும். பூர்வீகச் சொத்துக்கள் வரவேண்டியிருந்தால்; கிட்டும். பிதா வழி பல உதவிகள் கிட்டும். நூதனமான, பழமை வாய்ந்த சொத்துக் கள் பொருட்கள் கிட்டும். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை நிலவும். குடும்பத்தேவை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். கடினமாக உழைத்து முன்னேறக்கூடிய வருடம.; முயற்சிக்கேற்ற பலன் கிட்டும்.  02.11.2014 அன்று இரவு 9மணிக்கு அவதானம் தேவை.              


இங்கு குறிப்பிடும் நேரங்கள், திகதிகள் யாவும் திருக்கணித பஞ்சாங்க இலங்கை நேரங்கள்.

        கருத்துக்களுக்கு: கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் 
     விபுலானந்த வீதி, காரைதீவு, இலங்கை
           தொ.பே – +94775073347

Comments