[Untitled]‎ > ‎

29.10.19- இன்றைய ராசி பலன்..(29.10.2019)

posted Oct 28, 2019, 6:28 PM by Habithas Nadaraja


மேஷம்:பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 







ரிஷபம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.நாடி வந்தவர்களுக்கு உதவுவீர் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத் யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.   







மிதுனம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். உறவினர்களால் நன்மைஉண்டு. பழைய கடனில் ஒருபகு தியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவு வீர்கள். கனவு நனவாகும் நாள்.







கடகம்:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவி னர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத் தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.






சிம்மம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வுகாண்பீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத் யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள்.







கன்னி:கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகிசென்ற உறவினர்கள் வலியவந்துப் பேசுவார்கள். கைமாற்  றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப் பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.







துலாம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். யோகா,தியானம் என மனம் செல்லும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.






விருச்சிகம்:குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.







தனுசு:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் பயன டைந்தவர்கள் இப்போது உங் களுக்கு உதவி செய்வார்கள். பிரிய மானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.







மகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர் கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.







கும்பம்:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.






                                        
மீனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்தநல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம்வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
Comments