[Untitled]‎ > ‎

30.05.17- இன்றைய ராசி பலன்..(30.05.2017)

posted May 29, 2017, 6:48 PM by Habithas Nadaraja




 மேஷம்:  முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.  







ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். 







மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். 







கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.






சிம்மம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 







கன்னி: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மதிப்புக் கூடும் நாள். 







துலாம்உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் வரும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்







தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள். 






மகரம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.   







கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள். 







மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

Comments