[Untitled]‎ > ‎

30.08.16- இன்றைய ராசி பலன்..(30.08.2016)

posted Aug 29, 2016, 4:27 PM by Habithas Nadaraja   [ updated Aug 29, 2016, 4:28 PM ]
மேஷம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப்  பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.  
 
ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள். 


மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு  சாதனங்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்  மதிப்பார்கள். தடைகள் நீங்கும் நாள்.   


கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப்  பேச வேண் டாம். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும்  நாள். 


சிம்மம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு  காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய  நாள்.  


கன்னி:  குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த  ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.  


துலாம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை,  ஆபரணம் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.  


விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்-. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள். 
 

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய பகை, கடன் நினைத்து  கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து  செயல்பட வேண்டிய நாள்.   
  

மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றி யடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புது ஏஜென்சி  எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 



கும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில  மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.  


மீனம்:  மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.



Comments