[Untitled]‎ > ‎

அட்சய திருதியில் நல்லது செய்தாலும் மென்மேலும் வளரும்..

posted Apr 30, 2012, 2:37 AM by Web Admin

வைகாசி மாதம் சுக்லபட்சம் திருதியை திதியில் அட்சய திருதியை விரத த்தை கடைப்பிடித்து மேன்மையுறலாம்.

இந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விஷ் ணுவை நினைத்து வழிபட வேண்டும். அட்சய என்றால் மேலும் மேலும் வளர்ந்து நிறைதல் என்று பொருள்.

இந்த நாளில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல், எப்போதும், எதிலும், எங்கும் நல்லனவற்றையே பார்ப்பதுமாக நம் இதயத்தை விசாலமாக்கிக் கொள்ள இந்த நாளில் உறுதிபூண வேண்டும்.

இப்படி செய்தால் சந்தோஷம், அமைதி, நிம்மதி என எல்லாமே வீட்டில் நிறையும் என்பது இன்றைய நாளில் தத்துவம். இந்த நாளில் எந்த நல்லது செய்தாலும் அது மென்மேலும் வளரும், பல்கிப்பெருகும்.

ஆனால் இதனை தற்காலத்தில் தங்க நகைக் கடைகள் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ளும் பொருட்டு, மக்களின் கவனத்தை திசை திருப்பி அன்றையநாள் முழுவதும் நகைக் கடையில் கூட்டத்தில் அலைமோத வைத்துள்ளனர்.

தங்கத்தை மட்டும் சேர்த்து வைத்தால் போதுமா, வீட்டில் நிம்மதி வேண்டாமா. எனவே இந்த ஆண்டாவது அட்சய திருதியை அன்று விரதமிருந்து நம் வீட்டில் விளக்கேற்றி நிம்மதிக்கும் அமைதிக்கும் வித்திடுவோம். நகைக் கடைக்காரர்களின் சந்தோஷத்திற்காக அல்ல என்று உறுதிபூணுவோம்.

Comments