[Untitled]‎ > ‎

சிவராத்திரி..

posted Feb 20, 2012, 10:17 PM by Web Admin

 உலகெங்கும் வாழும் சைவத் தமிழர்களால் மகா சிவராத்திரி விரதம்

அனுட்டிக்கப்படுகிறது.இது மாசி மாதம் 08ம் திகதி கொண்டாடப்படும்.
சைவர்களின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்காக அனுட்டிக்கப்படும். இவ்விரதம்

இன்னோரன்ன நன்மைகளை எமக்கு அள்ளி வழங்கக் கூடியது.சிவராத்திரி என்பதை

சிவ+ராத்திரி=சிவனுக்குரிய இரவு எனப் பிரிக்கலாம்.

                                  அழகு தமிழில் இதைச் ”சிவனிரா நோன்பு” என்பர்.

வருடாவருடம் மாசிமாத அமவாசைக்கு முதல் நாளான தேய்பிறை சதுர்த்தசி அன்று

இவ்விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

                                          சிவராத்திரி என்றால் நமக்கு

தெரிந்ததெல்லாம் விடிய விடிய கண்விழிக்கும் விரதம் என்பது தான் இதற்காகவே புதுத்

திரைப்பட இறுவெட்டுக்கள் இணையம் தொலைக்காட்சி என்பவைற்றை சரணடைந்து

அன்று இரவு முழுக்க கண்விழிக்கும் பலர்தான் நம்மில் அதிகம். இது தவிர்க்கப் பட

வேண்டியது மட்டுமல்ல எதிர் மறையான பலன்களையும் ஏற்படுத்தி விடக் கூடும். எனவே

வெறுமனே கண்விழிப்பதை விட விரதத்துக்கான சரியான நியமங்களை அறிந்து

விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்..


                                  சிவராத்திரி அன்று சிவாலயம் சென்று நான்கு

சாமங்களிலும் பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வது முக்கியமானது.ஆலயம் செல்ல

முடியாதவர்கள் தம் வீடுகளில் கூட அன்று  சிவ பூசை செய்ய முடியும்.

        சிவராத்திரி விரதமானது எல்லா விதமான கோரிக்கைகளையும்

நிறைவேற்றக்கூடியது. எனவே தான் எல்லா விரதங்களையும் விட மேம்பட்டதென

போற்றப்படுகிறது. சிவராத்திரிக்குரிய அடி முடி தேடிய கதை,வேடன் சிவ பூசை செய்த

கதை எல்லாம் நாம் அறிந்தது தான். அறியாமல் இவ் விரதத்தை கடைப்பிடித்தாலே

அளவற்ற நற் பலன்கள் கிட்டுமென்றால் தெரிந்தே அனுட்டிக்கும் போது கிடைக்கும் போது

கிடைக்கும் நற் பலன்கள் தான் எத்தனை எத்தனை!!!

                              தென்னாடுடைய சிவனே போற்றி! என் நாட்டவர்க்கும்

இறைவா போற்றி!!
   இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!!!!

 

by:- பிலோஜன்.
 
Comments