[Untitled]‎ > ‎

சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் நந்தன வருடம் வெள்ளியன்று உதயம்..

posted Apr 10, 2012, 3:14 AM by Web Admin

லீந்தன வருஷம் 13.04.2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 5.47 மணிக்கு உத்தராடம் - 1 பாதத்தில் கன்னி இலக்கினத்தில் பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் முன்னிரவு 7.20 மணிக்கு உத்தராடம் - 2 பாதத்தில் துலாம் இராசியில் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் விஷ¥புண்ணியகாலம் 1.45 முதல் இரவு 9.45 வரை அமைவதாக கணிக்கின்றது.

பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள், பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் 13.04.2012 வெள்ளிக்கிழமை ‘நந்தன’ என்னும் பெயருடன் தமிழ் புதுவருடம் பிறக்கின்றது.

இத்தினத்தையே பெளத்த மதத்தினரும் தமது புத்தாண்டாக கொண்டாடுகி ன்றனர்.பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது சைவ மக்களின் மராபாகும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, பொங்கல், பலகாரங்கள் பரிமாறி அனைவரும் மகிழ்வோடு கொண்டாடுவது வழக்கமாகும்.

Comments