[Untitled]‎ > ‎

இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பதிப்புக்கள் - செல்வி. எழில்ரூபன் தர்சிகா

posted Dec 17, 2011, 1:56 AM by Web Admin   [ updated Dec 20, 2011, 11:34 AM ]
இலங்கையின் இந்துசமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்கு கீழே 65610 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பையும்;; கெண்ட ஒரு சிறிய நாடாகும். இலங்கை மிக நீண்ட காலமாக மேலை தேச அரசுகளின் ஆட்ச்சிக்கு உட்பட்ட ஒரு நாடகம் விளங்கியது.
 
1505-1658 வரை போத்துக்கேயரும்
1658-1796 வரை ஒல்லாந்தரும்
1796-1948 பெப்ரவரி 4ஆம் திகதி வரை ஆங்கிலோயரும்

இலங்கையை ஆட்ச்சி செய்தனர். போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையின் சட்டம், சமயம் போன்ற துறைகளில் கூடிய கவனம் செலுத்தினர்.அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் பெருமளவு மாற்றங்களை செய்யவில்லை. ஆனால், ஆங்கிலேயர்களே அரசியல் பொருளாதார துறைகளில் மாற்றங்களை செய்தார்கள். இவர்கள் அரசியல் துறையில் பிரித்தானியா மாதிரிகளான பாராளுமன்ற அரசாங்கத்தை பயன்படுத்தியதோடு  இவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களே இன்றும் அத்துறைகளில் பாரிய பாதிப்புக்களை செலுத்துகின்ற காரணிகளாக விளங்குகின்றன. இதனால் இலங்கையின் அரசியல் வரலாற்றினை ஆராய்கின்ற போது ஆங்கிலேயர்களின் ஆட்ச்சிக்காலம் முக்கியமானதொன்றாக விளங்குகின்றது.


    ஆங்கிலேயர் 1796ல் இலங்கையின் கரையோரப்பகுதிகளை கைப்பற்றிய போதும் 1798லேயே அதனை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து 1798–1802 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இரட்டை ஆட்சி நடை பெற்றது. இலங்கையின் வருமானம் வர்த்தகம் போன்றவை பிரித்தானிய கிழக்கு இந்திய வர்த்தக கம்பனியிடமும் பாதுகாப்பு  சிவில் நிர்வாகம் என்பன பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட தேசாதிபதியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1802ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட எமியன்சு உடன் படிக்கையின் படி இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக இணைக்கப்பட்ட பிரித்தானியர் பேரரசு பகுதியாக மாறியது.

    போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப்பகுதிகளைகைப்பற்றி ஆட்சி செய்தார்களே தவிர அவர்களால் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முடியவில்லை. ஆங்கிலேயரே முதன்முதலாக கண்டி இரச்சியத்தையும் கைப்பற்றி இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இலங்கையின் கரையோர பகுதிகளை கைப்பற்றி 19 வருடங்களின் பின்னரே 1815ல் கண்டியை கைப்பற்றினர்.
  
ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்றிய போது கண்டிய மாகாணங்கள் தனியாக நிர்வகிக்கப்படும் என்றும் பௌத்தமதம் நன்கு பேணப்படும் என்றும் உறுதி கூறினார். கண்டிக்கலம்பகம் எனக் கூறப்படுகின்ற ஆங்கிலேயரினால் மிக மோசமாக நசுக்கப்பட்டது. 1827ல் இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் கண்டியில் இன்னொரு கலம்பகம் வரவிடாமல் தவிர்பதற்காகவும் இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாக்தின் கீழ் கொண்டுவர விரும்பினார். இவை இரண்டையும் நிறைவேற்றும் வகையில் ஓர் அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவர ஆட்சியினர் விரும்பினர். இதற்கு சாதகமான வகையில் 1825ல் பிரித்தானியாவில் லிபரல்கட்சி (தாராண்மை கட்சி) ஆட்சியை பொறுப்பேற்றிருந்தது. இக் கட்சி பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையினாலும் தனது தாராளவாத கொள்கையை அறிமுகப்படுத்த முன் வந்தது.

    மேற்கூறியவற்றின் அடிப்படையில் பிரித்தானியா அரசாங்கம் 1829ல் இலங்கைக்கு என ஒரு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக கோல்புறூக்- கமரன் தலைமையில் ஒரு குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.  கோல்புறூக் குழுவினர் இலங்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்தது இலங்கையில் உள்ள நிலைமைகளை அவதானித்து ஓர் அரசியல் சீர்திருத்தத்தை சிபாரிசு செய்தனர். இவர்களால் சிபாரிசு செய்யப்பட்ட அரசியல் சீர்திருத்தம் 1833ம் ஆண்டு அமுலுக்கு கொண்டு வரப்பட்டு இடைக்கிடையே சில சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட போது அதன் அடிப்படைத்தன்மை மாற்றப்படாது 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல்; திட்டம் அமுலுக்கு வரும்வரை நடைமுறையில் இருந்தது.

செல்வி. எழில்ரூபன் தர்சிகா
1ம் வருடம்
கலைப்பிரிவு
விபுலானந்த மத்திய கல்லூரி
காரைதீவு.


Comments