[Untitled]‎ > ‎

கல்முனை கரையோர மீனவர்களின் மனக்குமுறல்கள்.. - தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

posted Oct 31, 2011, 8:10 AM by Web Admin   [ updated Nov 2, 2011, 9:28 PM ]
கல்முனை கரையோர மீனவர்களின் மனக்குமுறல்கள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் கடல்வளமும் வயல்வளமும் நிறையப்பெற்றது. குறிப்பாக கல்முனைக் கடற்றொழில்  பரிபாலன எல்லைக்குள் பெரியநீலாவணை முதல் குமுக்கன் வரையிலான நீண்ட கடற்பரப்பு உள்ளடங்குகிறது.

இப்பிராந்தியத்தில் சுமார் 20ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். கடற்கலங்கள் 2000 உள்ளன.மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை எயர்த்த பல்வெறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கல்முனைப்பிராந்திய கடற்றொழில் நீரியல்வள உதவிப்பணிப்பாளர் காத்தமுத்து செல்வராசா கூறுகிறார்.

இப்பிராந்தியத்தில் ஒவட்டோ தோணிகள் 1027 வன்வே அவுட்வோட் 651 தோணிகள் 22 கரைவலைத்தோணிகள் 161 வன்டே வோட் 104 மல்டி வோட் 40 உள்ளன என்று மீன்பிடிச்சங்கங்களின் வலைப்பின்னல் கூறுகிறது.

இதேவேளை மீனவர் அமைப்புகள் பரவலாக இருக்கின்றன.

கல்முனை தமிழ் பகுதியில் 4 சங்கங்கள் 299 உறுப்பினர்கள்

கல்முனை முஸ்லிம் பகுதியில் 14சங்கங்கள் 1042 உறுப்பினர்கள்

சாய்ந்தமருது  பகுதியில் 11 சங்கங்கள் 990 உறுப்பினர்கள்

காரைதீவு பகுதியில் 4 சங்கங்கள் 250 உறுப்பினர்கள்

நிந்தவூர் ; பகுதியில் 7 சங்கங்கள் 486 உறுப்பினர்கள்

அட்டாளைச்சேனை பகுதியில் 14 சங்கங்கள் 1351 உறுப்பினர்கள்

அக்கரைப்பற்று  பகுதியில் 7 சங்கங்கள் 732  உறுப்பினர்கள்

ஆலையடிவேம்பு  பகுதியில் 5 சங்கங்கள்495 உறுப்பினர்கள்

பொத்துவில்  பகுதியில் 6 சங்கங்கள் 622 உறுப்பினர்கள்

பாணமை பகுதியில் 01 சங்கங்கள் 45  உறுப்பினர்கள்

இந்த பின்னணியில் மனித அபிவிருத்தித்தாபனமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இணைந்து மீனவர் உரிமைகளைக்காக்கவும் தேவைகளை நிவர்த்தி வெய்யவும் மீனவர் சங்கங்களை ஒருங்கிணைத்து 2011 தை மாதத்தில் மீனவர் வலைப்பின்னலொன்றை கல்முனையில்  ஸ்தாபித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து திணைக்களத்தின் அனுசரணையுடன் நிவர்த்திசெய்து வருகின்றது.

நோக்கத்தில் பிரதானமாக மீன்பிடித்திணைக்களத்திற்கும் மீனவர்களிற்கிடையில் உறவை பலப்படு;த்தல்.அத்துடன் மீனவர்கள் சம காலத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடையாளப்படுத்தல்.

22.02.2011 அன்று நடைபெற்ற மீனவர் வலைப்பின்னல் அமைப்பதற்கான கூட்டத்தில் மீனவர் சங்கங்களிற்கு வலைப்பின்னல் அமைப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் தாபனத்தால் வழங்கப்பட்டது. அதற்கமைய 49 பதிவு பெற்ற சங்கங்கள் எமது தாபன வலைப்பின்னல் அமைப்புடன் இணைந்தது. இதில் 6002 மீனவ குடும்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடல்களுக்கு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கா.செல்வராசா  மாவட்ட பரிசோதகர்கள் இ. தேவராசா, ஜ.எல்.எம்.  சம்சுதீன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் அழைக்கப்ட்டு கலந்துகொள்வார்கள். 

இங்கு மீனவர்கள் பல்வேறுபட்ட திணைக்கள குறைபாடுகளை சுட்டிக்காட்டினர்.

மீனவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் ஆவன.

1.     பாடுகளுக்கான இட ஒதுக்கீடு பதிவு செய்தல்.

2.     மீனவர்களுக்கான வாடி அமைத்தல்.

3.     மீனவ சங்கங்கள் பதிவு செய்தல்.

4.     சட்ட விரோத மீன்பிடி, கடல் மண் அகழ்வு.

இக் கூட்டத்தின் முடிவில் தாபன இணைப்பாளர் பி;  .ஸ்ரீகாந் மீனவர்களிற்கும் மீன்பிடித்திணைக்களத்திற்கும் இடையிலான உறவை பலப்படுத்த மீனவ திணைக்கள அதிகாரிகளின் கருத்தின் படி அடுத்துவரும் கூட்டத்தில் பிரதேச செயலக அதிகாரிகளையும், கரையோர பாதுகாப்பு திணைக்கள, காணித்திணைக்கள அதிகாரிகளையும், மீனவ திணைக்கள அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படும் என தெரிவித்ததுடன் பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் எதிர்வரும் கூட்டங்களில் சந்திப்பினை ஏற்ப்படுத்த முயற்சி செய்வதாக தெரிவித்தார்.

மீனவர் கூறிய பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் கூறுகையில்…

1. கடற்றொழில்  திணைக்களத்திற்கும் எமக்கும் இடையில் வாடி அமைத்தல், கரைவலைபாடுகளுக்கான அனுமதியளித்தல். ஆகிய இரண்டு விடயங்களில் தொடர்பு காணப்படுகின்றது.

2. மீனவ திணைக்களம் குறித்த நபர் மீனவர் என உறுதிப்படுத்தி எமக்கு அனுப்புகின்ற அத்தாட்சியின் பிரகாரம் மேற்படி விடயங்களிற்கு நாங்கள் அனுமதியளிப்போம்.

ஆனால் தேசிய கொள்கைக்கு அமைய கரையோர கடலிருந்து 100 மீ க்கு அப்பால் எவ்வித கட்டிடங்களும் அமைக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. இதனால் மீனவர்கள் பல அசௌகரியங்களிற்கு உள்ளாவது வெளிப்படையான உண்மை. 100 மீ க்கு மேற்பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் இருப்பதால் மீனவர்களிற்கு வாடி அமைப்பதற்கான நில பற்றாக்குறை காணப்படுகின்றது. மீனவர்களின் பெறுமதியான பொருட்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்ப்படுகின்றது.

கரைவலைபாடுகளுக்கான அனுமதியளித்தல் அவ்வவ் பிரதேச செயலக பிரிவுகளில் நிலப்பரப்பையும் கடல் பரப்பையும் அடிப்படையாக கொண்டு கூடிக் குறைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ஒரு பிரதேச செயலகத்திற்கு அதிக அனுமதியையும் இன்னுமொரு பிரதேச செயலகத்திற்கு குறைந்த அனுமதியும வழங்கப்பட்டு மீனவர்களிற்கு வேறறுமை காட்டப்படுவது என்பது தவறான விடயம் இது அப் பிரதேச செயலகங்களிற்குமான கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது.

கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில்………..  

கரையோர பாதுகாப்பு அதிகார சபை மீனவ திணைக்களத்துடன் பல்வேறுபட்ட தொடர்புகள் காணப்படுகின்றது. வாடி அமைப்பதற்கான மீனவர்கள் மீனவ திணைக்களத்தின் அனுமதி கேட்டு எமது அனுமதியையும் பெற வேண்டியுள்ளது. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் கரையோரத்தை பாதுகாப்பது முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. ஒரு பிரதேச செயலக பிரிவில் சுமார் 1000 மீனவர்களிற்கு மேல் பாணப்படுகின்றனர். இதில் 25 வீதமானோரிற்கு வாடித்தேவை காணப்படுகின்றது. ஆனால் வாடிகள் அமைப்பதன் மூலம் கரையோரம் பாதிக்கப்படுகின்றது. இதனை நிரந்தரமாக அமைக்க சட்டத்தில் இடமில்லை தற்காலிகமாக அமைப்பதற்கான அனுமதியை நாங்கள் வழங்கியுள்ளோம். மீனவர்களின் பிரச்சினையானது. பல பெறுமதியான பொருட்களிற்கு தற்காலிக குடிசையில் வைப்பதில் பாதுகாப்பற்ற தன்மையுள்ளது.

நிரந்தர வாடிகள் அமைப்பது 65- 100  க்கு இடையில் ஒரு சில பிரதேசங்களில் ஒரே மாதிரியாக தொடர்வாடிகள் அமைப்பதற்கு எமது திணைக்களம் அனுமதியளித்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் மீனவர் வாடி அமைப்பதன் மூலம் இடப் பற்றாக்குறை கரையோர பாதுகாப்பு பிரச்சினை காணப்படுகின்றது. மீன்பிடித்திணைக்களத்திற்கோ அல்லது கரையோர பாதகாப்பு திணைக்களத்திற்கோ, பிரதேச செயலகத்திற்கோ இவ்வாறான தொடர்வாடிகள் அமைப்பதற்கு வளம் இல்லை மீனவர்களும் ஒன்றாக இணைந்து ஒரே மாதிரியான தொடர் வாடிகள் அமைக்க முன்வருவதும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற நிரந்தர தொடர்வாடிகள் அவுஸ்ரேலிய அரச சார்பற்ற நிறுவனமொன்றால் அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மேற்படி பிரச்சினையில் மீனவர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என தெரிவித்தார்.

காணித்திணைக்கள அதிகாரி கூறுகையில்……

                    மீனவர்களுக்கான மேற்படி இரண்டு விடயங்களாகிய கரைவலைப்பாடு, வாடி அமைத்தல், தொடர்பாக காணித்திணைக்களமாகிய நாங்கள் மீனவ திணைக்களத்துடன் இணைந்து செயற்படுகின்றோம். காணி அமைச்சின் ஊடாக வெளியிடப்படுகின்ற அனைத்து சட்டங்களையும் உறுதிப்படுத்துவது காணித்திணைக்களமாகிய எமது பொறுப்பாகும். ஆனால் இதன் ஊடாக இலங்கையில் அனைதது பிரதேச மீனவர்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது ஊடகங்கள் வாயிலாகிய  எங்களுடைய அனுபவரீதியாகவும் தெரிந்ததே ஆகும்.

ஒரு நாட்டின்; சட்டத்தை மதிப்பது அந் நாட்டின் அனைத்து பிரiஐகளினதும் கடமை பல்வேறுபட்ட பிரச்சினைகளிற்கு மீனவர்கள் முகம் கொடுப்பது தவிர்க்க முடியாதுள்ளது.

மேற்படி விடயங்களில் சட்டங்கள் மாற்றங்கள் உருவாக்கப்படும் போது மாத்திரமே மீனவர்கள் நன்மையடைவது சாத்தியப்படும்.

இக் கலந்துரையாடலின் முடிவின் போது புதிதாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் வெளிவந்தன.

1. மீனவ சங்கங்கள் பதிவில் அங்கத்தவர்கள் மீனவர்கள் அல்லாமல் சில

  மீனவர்கள் ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களாக

  காணப்படுகின்றனர்.

2. பதிவு இல்லாமல் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லல்.

3. ஒரு பிரதேசத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மீனவ சங்கம் பதிவு செங்தல்.

4. வங்கி, கடன், காப்புறுதி, என்பதால் ஏற்ப்படுகின்ற பிரச்சினைகள்

5. அரசாங்கத்தால் கம நெகும திட்டத்தின் கீழ் மீனவ சங்கம் மீண்டும்

  பதிவு செங்தல் அதற்கான பணம் அறவிடல்.

6. லஞ்ச ஊழல்.

தாபன இணைப்பாளர்  பி.ஸ்ரீகாந் கூறுகையில்..

இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் மீன்பிடித்திணைக்களம் நாரா நிறுவனத்துடன் இணைந்து பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அவையாவன.

1. அலங்கார மீன் வளர்ப்பு தொழில் ஊக்குவித்தல்.

2. கடலினுள் சென்று விசித்திரமான கடல் வாழ்

  உயிரினங்களை  ஏற்றுமதிக்காக பிடித்தல்.

என்பன தென் பகுதியில் மீனவ குடும்பங்களில் இளைஞர்களிற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அம்பாறை மாவட்டத்தினுள் கல்முனை கடற்பரப்பில் தென் பகுதியில் இருந்து வந்து மீன்பிடிப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஏன் இப்பகுதி மீனவ சமூதாயத்திற்கு இத் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியாதுள்ளது. என மீனவ திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர் அதற்கு மீனவ திணைக்கள அதிகாரி அரசினால் தேசிய ரீதியாக 14 திட்டங்கள் மீனவர்களிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் 2 திட்டங்கள் கரையோர மீனவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தில் மீன் பதப்படுத்தல், அலங்கார மீன் விற்பனை காணப்படுகின்றது. மிக விரைவில் இப் பிரதேசத்தில் இத் திட்டங்கள் அமுல் படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடல் முடிவில் பல உண்மைகள் தெரியவந்தன.அதன்படி

1.வாடி அமைப்பது சட்டத்திற்கு புறம்பான விடயமாகும். ஆனால் இலங்கையில் பெரும்பான்மை மீனவர்கள்

 வாழ்கின்ற பிரதேசங்களில் வாடி அமைக்கப்பட்டிருப்பது என்பது எவ் வகையில் நியாயப்படுகிறது.

2.நாரா நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற விசேட பயிற்சிகள் மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்ட முடிகின்றது. இது பெரும்பான்மையின சமூதாயத்தை மட்டும் மட்டுப்படுத்தப்படுவதுடன் சிறுபான்மையினர் வாழ்கின்ற பிரதேசங்களிலும் அவர்களுடைய அத்து மீறி தொழிலில் ஈடுபடுவது சிறுபான்மையின மக்களை புறக்கணிப்பது போல் தெரிகின்றது. ஒரு நாட்டின் தேசிய ரீதியான சட்டத்தை ஒரே திணைக்களத்தின் கீழ் அமுல் படுத்த சிறுபான்மையினர் வாழும் பிரதேசத்தில் நான்கு வருடங்கள் பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையினர் வாழும் பிரதேசத்தில் திட்டம் அமுலாக்கப்பட்டு மக்கள் லாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த கலந்துரையாடல் பொலிஸ் நிலைய அதிகாரிகள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, மாவட்ட அரச செயலக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளது.

இக் கூட்டத்தில் மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் எழுத்து மூலமாக மனித அபிவிருத்தி தாபனம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, அரசாங்க உதவி அதிபர் ஆகியோரிற்கு வழங்கப்படவுள்ளது.

 பிரச்சினை தீர்த்தலில் புதிய அணுகுமுறை

 மீனவர்களையும் மீனவர்களுக்காக செயற்படுகின்ற அரச உத்தியோகஸ்தர்களையும ஒரே இடத்தில் வைத்து கலந்துரையாடுகின்ற போது ஏற்ப்படுகின்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக் அரச உத்தியோகஸ்தர்களை தனியாக சந்தித்தலை இத்தாபனம் மேற்கொண்டது.

 இதில் வாடி அமைத்தல், கரைவலைப்பாடு மீனவர் சங்கங்கள் பதிவு, சட்ட விரோத மீன்பிடி,மண் அகழ்வு ஆகியவற்றிற்கு அரச உத்தியோகத்தர்களால் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது அறியப்பட்டது.

 இதில் அதிகாரிகள்  தமக்குரிய அதிகார வரம்பினுள் செய்யக்கூடிய விடயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

வாடி அமைத்தல்

ஒவ்வொரு பிரதேச செயலகங்களிற்கும் கீழ் மீனவர் அபிவிருத்திக் குழு உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பிரதேச செயலாளர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் ஏனைய உறுப்பினர்களாக அப் பிரதேச பிரிவிற்குள்ள மீனவர் சங்க உறுப்பினர்கள், பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலாளர்கள், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக காணி உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

கரைவலைப்பாடு

1984 வர்த்தமானி அறிவித்தலின்  படி அம்பாறை மாவட்டத்திற்கு 76 பாடுகளே வழங்கப்படும்; என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எக் காரணத்தையும் கொண்டு கரைவலைப்பாடுகள் அதிகரிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சங்க பதிவு

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் ஒரு மீனவர் சங்கம் மட்டுமே பதிவு செய்யலாம் எனவும் அதற்கு மேல் சங்கங்கள் பதிவு செய்ய வேண்டியிருப்பின் கிராம சேவகர், பிரதேச செயலாளர் மற்றும் மீன்பிடி திணைக்கள பரிசோதகர்களின் சிபார்சு கடிதம் அவசியப்படும்.

சட்ட விரோத மண் அகழ்வு

பிரதேச செயலாளர், மீன்பிடித்திணைக்களம், கரைவலைப்பாதுகாப்பு அதிகாரசபை ஆகியோர் இணைந்து ஓர் பொது இடத்தினை தெரிவு செய்தல் என இணக்கப்பாட்டுக்கு வந்தது. இது ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் அமுல்படுத்தப்படும்.

சட்ட விரோத மீன்பிடி

சட்ட விரோத மீன்பிடி தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வர முடியாத நிலை காணப்பட்டது. காரணம் சட்டத்தில் பல குறைபாடுகளை அரச உத்தியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டினர்.

1.பொலிஸ் அதிகாரிகளால் சட்ட விரோத மீன்பிடிப்பாளர்களை கைது செய்து நீதி மன்றத்திற்கு ஒப்படைத்தால் மிக குறைந்த அளவு தண்டப்பணமாக அறவிடப்படுவதால் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் இக் குற்றங்களை செய்து வருகின்றனர். உதாரணமாக சட்டவிரோத மீன்பிடிப்பானர் ஒருவரை கைது செய்து அவருடைய மீன்பிடி உபகரணங்களையும் நீதி மன்றத்திற்கு ஒப்படைக்க 5000 ரூபா செலவாகுமானால் குற்றவாளிக்கு தண்டப்பணமாக 100 ரூபா விதிக்கப்படுகின்றது.

   எனவே சட்டத்தினூடாக கூடுதலான தண்டனைகள் வழங்கப்படும்

  பட்சத்தில் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடிப்புக்களை நிறுத்த முடியும்.

 மீனவர் உள்ளக்குமுறல்கள்

 அதிகாரிகள் தமது நிலைப்பாடுகளைக் கூறியபோதிலும் மீனவர்கள் இப்படியும் சில குறைபாடுகளைத் தெரிவிக்கின்றனர்.

 கரைவலைப்பாடுகளுக்கான இட ஒதுக்கீடுகள் வழங்குவதில் பதிவுசெய்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

 பிரதேச செயலகங்களில் பாடுகளிற்கான பணம் செலுத்தியும் அனுமதி கிடைக்காமை

 தமக்குரிய பிரதேசங்களில் மற்றவர்கள் வந்து மீன் பிடிப்பது.

வர்த்தமானி அறிவித்தற் பிரகாரம் 76 பாடுகளிற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளபோதிலும் தற்போது கூடுதலான பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கரையோரங்களில்அதிகளவான கற்கள் காணப்படுகின்றபோதிலும் அவை இன்னும் அகற்றப்படவில்லை.

சுட்டவிரோத மீன்பிடி தொடர்பில் தடைசெய்யப்பட்ட வலைகளை இன்னும் பயன்படுத்துவது.

சுட்டவிரோத மண் அகழ்வை முற்றாக நிறுத்தாமை

 வாடி அமைத்தல் தொடர்பில்..

நிரந்தர வாடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் சில பகுதியகளில் அமைக்கப்பட்டருப்பது.

சுனாமிக்குப்பின் கடலோரப் பாதுகாப்பு வலயம் ( டீருகுகுநுசு ணுழுNநு)  65 மீற்றர் எனக்கூற்பட்டு அதற்குள் நிரந்தர வாடி அமைக்கமுடியாதெனக் கூறப்பட்டிருந்தபோதிலும் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.இதற்கு யார் அனுமதியளித்தது?

வாடி அமைக்க காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமை.

இதுதொடர்பில் கல்முனைப்பிராந்திய கடற்றொழில் நீரியல்வள உதவிப்பணிப்பாளர் காத்தமுத்து செல்வராசாவிடம் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளிக்கிறார்.

வாடி அமைப்பதுதொடர்பில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமு;ம் பிரதேச செயலகமும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களாகும். உண்மையில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சட்டப்படி 300 மீற்றாருக்குள் நிரந்தரக்கட்டடம் அமைக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது.

துற்போது சட்டவிரோத வலைப்பாவனை பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்’ கோமாரி கிட்டங்கி பொன்ற இடங்களில் அவற்றைக்கண்டுபிடித்து தடைசெய்தோம்.

இதுவரை நாம் இங்கு

5000 மீனவர்களை ஓய்வூதியத்திட்டத்தில் இணைத்துள்ளோம். 530 மீனவர்களை காப்புறுதித்திட்டத்தில் இணைத்துள்ளோம். ஆவர்கள் வருடாந்தம் 750 ருபா அல்லது 1500 ருபாவைச் செலுத்தவேண்டும்.இவர்கள் வைத்தியசாலையில் இருக்கும்போதும் இறப்பின்போதும்  உரிய கொடுப்பனவுகள் இழப்பீடுகள் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு அடையாள அட்டைகள் கிரமமாக வழங்கப்பட்டுவருகின்றன.இதற்காக பல நடமாடும் சேவைகளை நடாத்திவருகின்றோம் அண்மையிலும் ஒலுவில் பாலமுனை அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் முழுநாள் மீனவர் நடமாடும் சேவைகளை நடாத்தினோம்.

அத்துடன் விற்பனை அபிவிருத்தி தொடர்பிலும் கொழும்பிலிருந்து நிபுணர்களை கல்முனைக்கு வரவழைத்து மீனவர்களுக்கு பயிற்சியும் அறிவூட்டலும் செய்து வருகின்றோம்.

மீனவ்ர் அமைப்புகளை ஒன்றுசேர்த்து மாவட்ட சம்மோளனத்தை அமைத்துள்ளோம்.பின்பு இவர்களை தேசிய சம்மேளனத்துடன் இணைத்து தேவையான விடயங்களை நிவர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.  என்றார்.

இதேவேளை இலங்கையின் தேசிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

என்ன சொல்கின்றது என்பதை இவ்வண் பார்ப்போம்.

தேசிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

கொள்கையின் நோக்கமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை உறுதியாகப் பயன்படுத்துவது சம்பந்தமாக இலங்கையை தெற்காசிய வலயத்தினுள் முதன்மை நாடாக மாற்றுதல். என்பது சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக கடற்றொழில் மற்றும்

நீரியல் வளங்களின் பயன்பாடுகளை மேற்கொள்ளல்

கொள்கை ரீதியிலான நோக்கங்களைப் பார்க்கின்றபோது பின்வருவன கூறப்படுகின்றன.

ரூசூஒ10008க் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் மக்களது போசணை

மட்டத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்தல்

ரூசூஒ10008க் பின் அறுவடையின் போது வீண் விரயத்தை மட்டுப்படுத்தலும், மீன்

விநியோகத்தின் குணப் பண்புகளை அங்கீகரிக்கப்பட்ட தரத்துக்கு

உயர்த்துதல்

ரூசூஒ10008க் கடற்றொழில் கைத்தொழில் துறை சார்ந்த ஏனைய கைத்தொழில்களின ;

மூலம் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி சமூகப் பொருளாதார

நிலையை விருத்தி செய்தல்.

ரூசூஒ10008க் மீன் உற்பத்தி ஏற்றுமதியின் மூலம் அண்ணிய செலவாணி ஈட்டத்தை

அதிகரிக்கச் செய்தல்.

ரூசூஒ10008க் நீரியல் சூழலைப் பேணுதல்.

கொள்கை

இக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு கடற்றொழில் மற்றும ;

நீரியல் வளங்களுக்குப் பொறுப்பான அமைச்சுக்கு உரியதாகும்.

வள முகாமைத்துவத்தில் பாதுகாப்பான வழிமுறை ஒன்றை அமைச்சு

பின்பற்றும்.

சமுத்திர மற்றும் உள்ளக கடறn; றாழில் கைத்தொழில்

01. சர்வதேச இணக்கப்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு அமைய பொறுப்பு

வாய்ந்த கடற்றொழிலின் மூலதர்மங்களை விருத்தி செய்தல்.

02. கடற்றொழில் மற்றும் நீரியல் வளக் கணக்கெடுப்பு, கையிருப்பு மதிப்பீடு மற்றும்

ஆய்வு ரீதியிலான கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு முதன்மை வழங்கல்.

03. தற்போது அறுவடை செய்ய்பபடாத மீன்களை அறுவடை செய்ய பொருத்தமான

தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தல்.

04. தீங்கு விளைவிக்கும் மற்றும் பாதகம் ஏற்படுத்தும் மீன்பிடி உபகரண முறைகள்

மற்றும் செயற்பாடுகளைக் தவிர்த்தல்.

05. செவுள் வலையின் பயன்பாட்டை மட்டுப்படுத்துவதற்கு வேறு உபகரண

முறைகளை விருத்தி செய்தல்.

06. மீன் உற்பத்தி மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக

கரையோர கடற்றொழிலின் மூலம் கிடைக்கும் உச்ச பங்களிப்பைக் கருத்திற்

கொண்டு அவ்வளங்கள் அருகிச் செல்வதைத் தடுப்பதற்காக அதன்

முகாமைத்துவத்துக்கு முதலிடம் வழங்கல்.

07. கரையோர கடற்றொழில் கைத்தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மித

மிஞ்சிய கடற்றொழில் நடவடிக்கைகளை வேறு திசையில் திருப்புவதற்கு மாற்று

வருமான வழிகளை இத் துறையினுள் தோற்றுவிக்க தேவையான

நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

08. கரையோர கடற்றொழில் துறையில் பாரம்பரிய மீனவனுக்குள்ள உரிமைகளை

உறுதிப்படுத்தல்.

09. கடற்றொழிலாளர்களின் தேவைக்கமையவும், கடற்றொழில் நடவடிக்கைகளுக்குப்

பாதிப்பு ஏற்படாவண்ணம் சமுத்திர சுற்றுலா கைத்தொழில் மற்றும் பொழுது

போக்குக்காக மீன் பிடித்தல் போன்ற தெரிவு செய்யப்பட்ட வர்த்தக

நடவடிக்கைகளை விருத்தி செய்தல்.

10. அங்கீகரிகக் ப்பட்ட தரத்துக்கு அமைய பன்னாட் கடற்றொழில் கலங்களின்

பாதுகாப்பு மற்றும் வினைத் திறனை விருத்தி செய்வதற்காக கலங்களுக்கான

திட்டமிடல் நடவடிக்கையை ஊக்குவித்தல்.

11. சர்வதேச கொள்கைகளுக்கு அமைய முக்கூட்டு வலையின் கைத்தொழில்

துறையை மட்டுப்படுத்த செவுள் வலையின் பயன்பாட்டை பிரபல்யப்படுத்தல்.

12. கடற்றொழில் வளங்களை அனுமதியின்றி அறுவடை செய்வதைத்

தவிர்ப்பதற்காக கடற்றொழிலாளர்களின் பங்களிப்புடன் தேடுதல் மற்றும ;

கண்காணிப்பு (ஆஊளு) நடவடிக்கையை விருத்தி செய்தலும் கலங்களின்

மேற்பார்வை நடவடிக்கை அலகு (ஏஆளு) ஒன்றையும் ஸ்தாபித்தல்.

13. உள்நாட்டு பன்னாட் கலங்களை சர்வதேசக் கடற் பரப்பில் கடற்றொழில்

நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தல்.

14. சர்வதேசக் கடலில் கடற்றொழில் நடவடிக்கைகளை முகாமை செய்வதற்காக

வலய கடற்றொழில் முகாமைத்துவ அமைப்புடன் உள்ள தொடர்பை விருத்தி

செய்து கொள்வதும், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைய

நடவடிக்கைகளை மேற்கொள்வதும்.

15. சர்வதேச கடலிலும் கடற்றொழில் கைத்தொழிலில் உள்நாட்டு, வெளிநாட்டு

பிரிவினரின் முதலீடுகளை விருத்தி செய்தல்.

16. நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அத்தொழிலாளர்களின் பங்களிப்புடன்

அபிவிருத்தி செய்தல்.

நன்னீர் உயிரினச் செய்கை

17. நீர்ப்பாசன நீர்நிலைகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு

கடற்றொழிலாளர்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாத்தல்.

18. சந்தை வாய்ப்பை இலக்காகக் கொண்ட சூழலுக்குச் சாதகமான மற்றும்

சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளும் நீர்வாழ் உயிரினச் செய்கையை அபிவிருத்தி

செய்தல்.

19. நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தித் துறையில் முதலீடு செய்வதற்கு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் தரப்பினரை ஊக்குவித்தல்.

20. சமூகத்தினரின் பங்களிப்புடன் நீர்வாழ் உயிரினச் செய்கை நடவடிக்கைகளை

ஆரம்பிக்க தனியார் பிரிவு முதலீட்டாளர்களை ஊக்குவித்தல்.

21. வலயத் திட்டம் (ணுழயெட Pடயளெ) அடிப்படையில் இறால் வளர்ப்பு செயல்

திட்டத்தை விருத்தி செய்தல். முற்றும் பொது அடிப்படை வசதிகளை வழங்கல்.

22. இறால் கைத்தொழிலில் பாதிக்கப்பட்ட சூழலைப் புனரமைப்பு செய்வதற்கு

முதன்மை வழங்கல்.

23. சுயதொழிலை ஏற்படுத்தும் முகமாக பயனுள்ள பணிகளை நிறைவேற்றிக்

கொள்வதற்கு இறால் செய்கையாளர்களின் சங்கத்தை ஊக்கப்படுத்தலும ;

சிறப்பான முகாமைத்துவ செயற்பாடுகளை (டீநளவ ஆயயெபநஅநவெ

Pசயஉவiஉநள) அறிமுகம் செயத் லும்.

24. இயற்கையாகவே மீன் இனங்களுக்கு கடற்றொழில் கைத்தொழிலினால் ஏற்படும்

பாதிப்புகளை மட்டுபப் டுத்தும் நோக்குடன் உவர் நீர் மற்றும் நன்னீர் நரீ ;வாழ்

உயிரினச் செய்கை மற்றும் அலங்கார மீன் உற்பத்தி போன்ற

கைத்தொழிகளுக்கு தனியார் தரப்பினரை ஊக்குவித்தல்.

25. மீள் கொடுப்பனவு செய்யும் முறையின் கீழ் வெளி செய்கையாளர்களைப ;

பயன்படுத்தி அலங்கார மீன் செயல் திட்டத்தை ஆரம்பிக்க தனியார் பிரிவுக்கு

ஊக்கம் கொடுத்தல்.

26. மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடித்தல் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு

நிரந்தர மற்றும் பருவகால நீர்நிலைகளில் மீன் இனங்களை விருத்தி செய்தல்.

அடிப்படை வசதிகள்

27. துறைமுகம், நங்கூரமிடும் தளம் மற்றும் படகுத்துறை போன்றவற்றில்

கடற்றொழில் துறைக்குத் தேவையான சேவைகள் மற்றும் கரையோர

பாதுகாப்பு கட்டமைப்புகள் உட்பட பொது வசதிகளைத் திட்டமிடும் போதும்

அதனை நடைமுறை;படுத்தும் போதும் மற்றும் முகாமைத்துவத்தின் போதும ;

சம்பந்தப்பட்டவர்களை இணைத்துக் கொள்ளல்.

28. கடற்றொழில் துறைமுகம், நங்கூரமிடும் தளம் மற்றும் படகுத்துறை

போன்றவற்றுக்கு குளிரூட்டலறை, நீர்வழி, பனிக்கட்டி, நீர ; வசதி மற்றும்

மீன்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் போன்ற

சேவைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை வழங்க தனியார் பிரிவின்

பங்களிப்பைப் பெறல்.

29. நிர்மானித்தல், செயற்படுத்தல் மற்றும் உரிமை மாற்றம் டீரடைவஇ ழுpநசயவந ரூ

வுசயளெகநச) அடிப்படையில் புதிய துறைமுகங்களை நிர்மானித்தல் உட்பட

ஏனைய அடிப்படை வசதிகளை வழங்க, முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும்

வெளிநாட்டு தனியார் பிரிவினரை ஊக்கப்படுத்தல்.

30. மீன் பதனிடல் மற்றும் தகரத்திலடைக்கும் தொழிற்சாலைகளை

நிர்மானிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினரை ஊக்கப்படுத்தல்.

விநியோகம்

31. மீனவர்களின் கடற்றொழில் உற்பத்திகளுக்குப் போட்டி விலையைப் பெற்றுக்

கொடுத்தல் மற்றும் நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் மீன்களைப்

பெற்றுக் கொள்ள ஏற்ற சூழலை ஏற்படு;தல்.

32. நன்னீர் மீனவர்களுக்கு அதிக வருமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்

நோக்குடன் கடல் மீன் நுகர்வு பரவலாக உள்ள நகரங்களிலும் நன்னீர் மனீ ;

உற்பத்திகளின் நுகர்வை விருத்தி செய்தல்.

33. பெறுமதி கூட்டப்பட்ட மீன் உற்பத்தி மற்றும் நுகர்வை விருத்தி செய்தல்.

34. பெறுமதி கூட்டப்பட்ட மீன் உற்பத்தி ஏற்றுமதியை ஊக்குவித்தல்.

35. உள்நாட்டு மீன் வழங்கலில் சுகாதார பாதுகாப்புத் தரத்தைப் பேணி வரல்.

ஆராய்ச்சி

36. போதிய கவனம் செலுத்தப்படாத உயிரற்ற வளங்களின் ஆய்வு நடவடிக்கை

களுக்கு விசேட கவனம் செலுத்தி கடற்றொழில் நீரியல் வளத் துறையில்

அபிவிருத்திக்கு உதவும் ஆராயச்சிகளுக்கு முதன்மை வழங்கல்.

உயிரற்ற நீரியல் வளங்கள்

37. உயிரற்ற நீரியல் வளங்கள் பயன்பாடு மற்றும் சமுத்திர சக்தியை

பிரயோசனப்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரிவினரை

ஊக்கப்படுத்தல்.

விரிவாக்கல் மற்றும் பயிற்சி

38. கடற்றொழில், நீரியல் வளங்கள் துறையின் அபிவிருத்திக்குத் தேவையான

தகவல்கள் மற்றும் தொழில் நுட்பத்தை மீனவ சமூகம் உட்பட

சம்பந்தப்பட்டவர்களிடையே கொண்டு செல்ல விரிவாக்கல் சேவை அலகைப்

பலப்படுத்தல்.

39. நிபுணத்துவ அபிவிரு;ததிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின்

ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல்.

கடற்றொழிலாளர்களின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்தல்.

40. சமூக மைய கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தல்.

41. இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில்

கடற்றொழில் சமூகத்தின் ஆற்றல்களை விருத்தி செய்தல்.

42. சமுத்திரத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களைத் தவிர்த்துக ;

கொள்ளவும், ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றவும் நிவாரண

சேவைகளை வலுப்படுத்தல்

43. கடற்றொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல்.

44. வருமான முகாமைத்துவம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்தல்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடற்றொழி;ல் கைத்தொழில் துறையை புனரமைப்பு

செய்தல்

45. மோதல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில்

கடற்றொழில் நடவடிக்கைகளை புனரமைப்பு செய்தல். முற்றும் அபிவிருத்தி

செய்வதற்கு முதன்மையளித்தல்

46. இடம் பெயர்ந்து அகதிகளாக வாழும் மீனவர்களை மீண்டும் தமது சொந்த

கிராமங்களிலேயே குடியமர்த்துவதற்குப் பொருத்தமான சூழலைத்

தோற்றுவித்தல் மற்றும் அதற்கமைய தம் ஜீவனோபாயத்தை மீள

ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல்.

47. சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் வளங்களை

நவீனமயப்படுத்துதை அடிப்படையாகக் கொண்டு புனரமைத்தல்.

நிறுவன மற்றும் சட்டங்கள்

48. கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறையில் அரச நிறுவனங்களை சமகாலத்

தேவைகளுக்கு ஏற்ற வகையில் புனர்நிர்மானம் செய்தல்

49. ஏனைய சட்டங்களில் உள்ள நேர் எதிரான ஒழுங்கு விதிகளை மீளாய்வு

செய்து பொருத்தமான திருத்தங்களை அறிமுகம் செய்தல்.

சர்வதேச ஒத்துழைப்பு

50. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்திக்கு வெளிநாடுகளுடன ;

இருதரப்பு, பல்தரப்பு மற்றும் வலய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை

மேற்கொள்ளல்.

சூழல்

51. கரையோர சூழலைப் பேணலும் விருத்தி செய்தலும்.

52. துறையில் உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளின் போது “தூய்மையான

உற்பத்தி எண்ணக் கருவைப்” (ஊடநயநெச Pசழனரஉவழைn ஊழnஉநிவ)

பயன்படுத்தல்.

53. துறை சார்ந்த சகல நடவடிக்கைகளின் போதும் சூழல் பாதுகாப்புத் தேவை சம்பந்தமாக முதன்மை வழங்கல்

நன்றி: தேசமான்ய விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா











Comments