[Untitled]‎ > ‎

தீபாவளி

posted Sep 10, 2011, 12:14 AM by Web Admin   [ updated Oct 29, 2011, 11:57 PM ]
தீபாவளி

தமிழர் வாழ்வில் விரதங்களும் பண்டிகைகளும் ஆண்டு தோறும் வருகின்றன.அவை தமிழர் வாழ்வியலோடு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை.அவை இறைவனுக்கும்  உயிரினத்திற்குமுள்ள தொடர்பை திரும்பத் திரும்ப நினைவூட்டுகின்றன.
விரதமானது வாழ்க்கை முறையைக் கட்டுப்படுத்தி புலனடக்கத்தை வலியுறுத்தி நிற்க பண்டிகையானது குடும்பமும் சமுதாயமும் சேர்ந்து பூரிப்பதை சுட்டி நிற்கின்றது.பண்டிகைகளுள் தீபாவளி முதன்மையானது.


தீபாவளி - தீபூஆவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடுவதுதான் தீபாவளி.

தீபம் என்பது அகல் திரி எண்ணெய் ஆகிய மூன்றின் கூட்டு. அவை எதனையும் விளக்குவதில்லை.அவற்றைக் காணவே ஒளி தேவை. ஆந்த ஒளி தீபத்திலும் இல்லை.நெருப்புக்குச்சியிலும் இல்லை.அவை வெறும் எரி பொருளே.ஒளியால் விளக்கப்பெறுபவையே.
ஓளியென்ற மறைபொருள் நின்று திரியின் நுனியைப் பற்ற  திரி எரிகிறது.எரிகிற திரியை ஒளியாகக் கருதுகிறோம்.ஒளி புலப்படுவதல்ல மாறாக புலப்படுத்துபவை. புலப்பட்டவை எரிபொருளான திரியும் எண்ணெயுமே. ஊலகமாகக் காண்பவை அனைத்தும் விளக்குத்திதியும் எண்ணெயும் போன்ற சடப்பொருட்களே..

தீபத்தின் வரிசையை நாம் அமைக்கலாம். துpரியின் நுனியில் ஒளியாக இருக்கின்ற இறைவனை அடையாளம் காணலாம். வுpளக்கின் ஒளியே தெய்வம்.இது தீபாவளியின் உள்ளார்ந்த நிலையாகும்.

தீபாவளிப் பண்டிகையின் அடிப்படையே கெட்ட சக்திகள் விலகி தனிமனிதர் சமூக வாழ்க்கையில் அமைதியும் சுபிட்சமும் ஏற்படுவதற்கான துவக்கமாக கருதப்பட்டு நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இறையொளியின் அம்சமாக தீபங்களாக ஏற்றிவைத்து வழிபடுவது நமது நாட்டில் தீபாவளித் திருநாளன்று தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எங்கும் ஒளிபிறந்து அறியாமை அகங்காரம் கோபம் போன்ற எதிர்குணங்கள் அழிய வேண்டும் என்பதே தீப ஒளி ஏற்றி கொண்டாடுவதன் அர்த்தமாகும்.

இலங்கையைப்போல் தீபங்களை ஏற்றி தீபாவளியைக் கொண்டாடும் பழக்கம் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனினும் ராஜஸ்தான் குஜராத் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு வீடும் ஒளியாமல் மிளிரும் அளவிற்கு தீபங்களை ஏற்றுகின்றனர்.

தீபாவளி அன்று லக்ஷ்மி குபேர புஜை செய்வது விசேடமாகும். ஐப்பசி மாத சதுர்தசி திதியில் இப்பூஜையை செய்வது மிகுந்த பலனளிக்கக் கூடியது.

இதைப்போலவே கேதார கௌரி விரதமும் ஆகும். சிவனை நோக்கி அம்பாள் தவம் இருந்து வழிபட்ட முக்கிய நாள் இதுவென்பதால் தங்களின் கணவரின் நலன் வேண்டியும் நீடு வாழவும் பிரார்த்தித்து சுமங்கலி பெண்கள் விரதமிருக்கும் நாள் கேதரா கௌரி விரதமாகும்.


எண்ணெய்க் குளிப்பு

அஞ்ஞானம் என்னும் இருள் மறைந்து மெய்ஞானம் என்னும் ஒளி பிறப்பதை உணர்த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் போது இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.

நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்.

தீபாவளி அன்று எண்ணெயில் தனத்திற்கு அதிபதியான லஷ்மியும் வெந்நீரில் கங்காதேவியும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் இந்த எண்ணெய்க் குளியலை ஹகங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம்.

தீபாவளி திருநாளில் இந்தியாவில்  புனித நதிகளில் தலையாயதான கங்கையில் குளிப்பது மிகுந்த புண்ணியமளிப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் தீபாவளி திருநாளில் வட மாநிலங்களில் கங்கா ஸ்ஞானம் ஆனதா என்று கேட்டுத்தான் தீபாவளி வாழ்த்து கூறுகின்றனர்.
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது.

தீபாவளியன்று அதிகாலையில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை ஹகங்கா ஸ்ஞானம்' என்று கூறுகிறோம்.


கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக தீபாவளி எண்ணெய்க் குளியல் கருதப்படுகிறது. இந்த நாளில் காசியிலுள்ள கங்கையாற்றில் நீராடி அங்குள்ள விஸ்வநாதர் - விசாலாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தீபம் ஏற்றல்
தீபாவளி அன்று வீட்டின் பல பகுதிகளிலும் தீபங்களை ஏற்றிவைத்து மகாலஷ்மியை தியானித்து வழிபட வேண்டும். மாலையில் வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றிவைத்தல் அவசியம். தீபாவளி அன்று குறைந்தது 21 விளக்குகளையாவது ஏற்றிவைக்க வேண்டும் என்பது மரபு.

புதிய பொருட்களை வாங்குவதற்கும் வர்த்தக வியாபார நிறுவனங்களை தொடங்குவதற்கும் உகந்த நாளாக தீபாவளி கருதப்படுகிறது. சிலர் இந்த நாளில் தங்கள் நிறுவன கணக்குகளையும் புதிதாகத் தொடங்குவார்கள்.

புதிய நகைகள் வாங்குவது புதிய ஆடைகள் வாங்குவது உள்பட இனிப்புகள் பலகாரங்களுடன் இந்த பண்டிகையை உவகைபொங்க கொண்டாடுகிறோம். தீமை அழிந்து மகிழ்ச்சி ஏற்பட்ட நாளைக் குறிக்கும் விதமாகவே தீபாவளி நாளில் பட்டாசுகளையும் ஒளிரச் செய்து மகிழ்கிறோம்.

தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்துவிடுவதுடன் இரவிலும் அதிக நேரம் கழித்தே தூங்கச் செல்கிறோம்.

வனவாசத்திற்குப் பின்னர் இராமர் மீண்டும் அயோத்தி வந்து அரச பொறுப்பைஏற்ற நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

       
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் தீபாவளி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கின்றன.

திருமணம் முடிந்த முதல் ஆண்டில் வரும் தீபாவளியை தலை தீபாவளியாக புதுமணத் தம்பதியர் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த அளவுக்கு இந்துக்கள் மத்தியில் தீபாவளிப் பண்டிகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குழந்தைகளைப் பொறுத்தவரை பட்டாசுகள் புத்தாடை இனிப்புகள் என்று அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள பிற மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கும் குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். அந்த வகையில் மதநல்லிணக்கத்திற்கும் தீபாவளிப் பண்டிகை காரணமாகிறது என்றால் அது மிகையில்லை.


நமது நாட்டில் மார்கழி இறுதி நாளை போகிப் பண்டிகையாகக் கொண்டாடி மறுநாள் மகர நட்சத்திரத்தில் சூரியனுக்குப் பொங்கலிட்டு தையுடன் பிறக்கும் புத்தாண்டை தொடருவதைப் போலவே வட நாட்டில் தீபாவளி தினத்தன்று லக்ஷ்மி குபேர பூஜை செய்து புது ஆண்டையும் புது கணக்கையும் துவக்குவது வழமையாக உள்ளது.

பொங்கல் நாளிற்குப் பிறகு மாட்டுப் பொங்கலும் அதனைத் தொடர்ந்து காணும் பொங்கலன்று நாம் நமது குடும்பத்தின் உறவினர்களில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெறுவதைப் போலவே தீபாவளி முடிந்த பிறகு பெரியோர்களிடம் ஆசி பெறும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.

பொதுவாக இந்நன்னாள் எல்லா கெட்ட எண்ணங்களும் பார்வைகளும் மறைந்து அமைதியும் சுபிட்சமும் உருவாகிறது என்ற அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது.


தலைத்தீபாவளி


தீபாவளி ஆண்டுக்கு ஒரு முறை என்றால் தலை தீபாவளியோ ஆயுளுக்கு ஒரு முறைதான்... ஆம் திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது!

திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு.

புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர் வரிசை (வெற்றிலை பூ பழங்கள் இனிப்புகள் ஆடைகள் ) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர்.

அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.

தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து அந்த பெண்ணும் அவளது கணவரும் எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர்.

பூஜைகள் செய்து பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமகன் தன் மனைவியின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவதுதான் தலை தீபாவளி.

பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும் பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.

என்ன உங்க தலைத் தீபாவளி ஞாபகம் வந்துவிட்டதா?


சமணத்தில் தீபாவளி

தீபாவளி பிறந்தது இன்றில் இருந்து 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சமண சமய வரலாறு கூறுகிறது. சமண சமயத்தின் 24வது குருவான (திருத்தங்கரர்) ஸ்ரீமகாவீரா உடலை நீத்த நாள் முதல் தீபாவளி கொண்டாடப்பட்டு வருவதாக அந்த வரலாறு கூறுகிறது.

கி.மு. 599ல் பிறந்த மகாவீரர் தனது 14வது வயதில் வளமான வாழ்வைத் துறந்து ஆன்மீக ஞானம் தேடி இறையருள் பெற்றவராய் பல தேசங்களுக்குப் பயணம் செய்து அகிம்சை சத்தியம் மனிதாபிமானம அன்பு பரிவு கருணை ஆகியவற்றை 8 கொள்கைகளாக போதித்தார்.

இறை நிலையை எட்டி (முக்தி பெற்று) பல்வேறு அரசவைகளுக்குச் சென்று பேருண்மையை போதித்து வந்த மகாவீரர் கி.மு. 527ல் தன் உடலை துறந்தார்.

அவர் உடலைத் துறந்த நாளையே தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து அறியாமை இருள் அகன்று ஒளி பிறந்த நாளாக தீபாவளி என்று கொண்டாடப்பட்டதாகவும் அதுவே இன்று வரை பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் சமண வரலாறு கூறுகிறது.

தீபங்கள் இன்று மட்டுமா

ஜப்பசி கார்த்திகை மாதங்களில் தொடர்ச்சியாக தீபமேற்றுவதுதான் மரபு.அது கார்த்திகை தீபவிழாவுடன் நிறைவடையும்..
முதல்நாள் ஒரு விளக்கு. இரண்டாம் நாள்  இரு விளக்குகள்  என்று படிப்படியாக விளக்குகளின் எண்ணிக்கை வளர்ந்து கார்த்திகை மாதத்துப் பரணியில் நிறைவு கண்டு கிருத்திகையன்று வானளாவும் அகண்ட தீபம் (சொக்கப்பானை) ஏற்றுகிறொம்.
இந்த ஒளியைக் காண்கிற ஈயும் கொசுவும் பூண்டும் மரமும் யானையும் சிங்கமும் மனிதரும் தேவரும்  - ஏன் நரக வாசிகளும் ஆமனிலை பெறுநுவர் என்பது நம்பிக்கை.
ஆனால் இன்று அது சுருங்கி தீபாவளியன்று மாத்திரம் தீபமேற்றி தீபவிழாவைக் கொண்டாடுவதாக மாறியுள்ளது.
விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா


Comments