[Untitled]‎ > ‎

நமது உரிமைகளை அறிவோம்... Samasri Deshamaniya P.Srikanth

posted Oct 15, 2011, 1:44 AM by Web Admin   [ updated Nov 2, 2011, 8:59 AM by Web Team -A ]
நமது உரிமைகளை அறிவோம்
1. நமது உரிமை

    மனித உரிமைகள் குறித்து அதில் உலக உடன்படிக்கைகள் ஒப்பந்தங்களில் தனி நபருக்கும், குழுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பல்வேறு   
    உரிமைகள் இங்கே பட்டியல் படுத்தப்படுகின்றது. இன்றைய சூழுலில் கீழே சொல்லப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் நமக்கு உள்ளனவா 
    என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. என்னென்ன உரிமைகள் நமக்குண்டு என்பதையாவது கொள்வோம்.

தனி மனிதருக்கு உரிய உரிமைகள் :

2.குடிமை உரிமைகள் (Civil Rights)


    உயிர் வாழ்வதற்கான உரிமை
    சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
    தேசிய இனத்திற்கான உரிமை
    நீதிமண்றத்தை அணுகுவதற்கான உரிமை
    வெளிப்படையான விசாரணைக்கான உரிமை
    குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை
    இலவச சட்ட உதவிக்கான உரிமை
    குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும் அவரே எதிர்வாதாடவும் உள்ள உரிமை
    சாட்சிகளை விசாரிப்பதற்கான உரிடை
    உறுதி அளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்பொது குறை தீர்க்கும் அமைப்புக்களை அணுகுவதற்கான உரிமை
    ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை
    மேல்முறையீடு மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை
    தகவல்களைப் பெறவும் தேடவும் பெற்றதை வழங்குவதற்குமான உரிமை
    மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை
    தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை
    தன் மான்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை
    நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை
    நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை
    தனினிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை
    ஒரு நாட்டில் நுளைவதற்கான உரிமை
    ஒருநாட்டை விட்டு வெளியேறுவதற்கான உரிமை



3.அரசியல் உரிமைகள் :

    கருத்துக்களை வெளியிட உரிமை
    கூட்டம் கூடுவதற்கான உரிமை
    சங்கமாக சேருவதற்கான உரிமை
    வாக்களிப்பதற்கான உரிமை
    அரசியல் பங்கேற்பதற்கான உரிமை
    பொதுப்பணிகளில் சமவாய்ப்பு பெறுவதற்கான உரிமை

4.பொருளாதார, சமூக பண்பாட்டு உரிமைகள் :

    வேலைக்கான உரிமை
    வேலையை தெரிவு செய்யும் உரிமை
    சொத்து வைத்திருப்பதற்கான உரிமை
    போதிய வாழ்கைத் தரத்தை கொண்டிருப்பதற்கான உரிமை
    கல்வி பெறுவதற்கான உரிமை
    குடும்பம் அமைத்துக் கொள்வதற்கான உரிமை
    சமூக பாதுகாப்புக்கான உரிமை
    ஆயுள்காப்பிட்டுக்கான உரிமை
    சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை
    அறிவியல் முன்நெற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை
    சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை

5.குழுக்களின் உரிமைகள் :

    சம ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)
    கூட்டாக பேரம் பேசுவதற்கான உரிமை
    தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற் சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை
    போராட்ட உரிமை
    சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை
    நியாயமான ஊதியத்திற்கான உரிமை
    வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை
    பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை
    பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிபுரிவதற்குமான உரிமை
    வேலைவாய்ப்புக்கான வழிகாட்டதல் பயிற்சிபெறும் உரிமை


6.பெண்களுக்கான உரிமைகள்

    சம ஊதியம் பெறுவதற்கான உரிமை
    பாலியல் சமத்துவத்துக்கான உரிமை
    தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை
    சுறண்டலிலிருந்து பாதுகாப்பு பெற உரிமை
    கர்ப்பினி பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை

7.குழந்தைகள், இளம் குற்றவாளிகளுக்கான உரிமைகள் :

    கல்வி பெறுவதற்கான உரிமை
    தொழில் பயிற்சி மற்றும் வேலை இடைப்பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை
    கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புணர்வாழ்வு பெற உரிமை
    மறணதண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை
    சித்திரவதை, சுறண்டல் கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை
    வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை
    விளையாட்டு பொழுதுபோக்கிற்கான வாய்ப்பு பெறும் உரிமை
    சமூகசேவைகளைப் பெறுவதற்கான உரிமை

8.சிறைக் கைதிகளின் உரிமைகள் :

    சிறைக் கைதியாகப் பதிவு செய்யப்படுவதற்கான உரிமை
    சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை
    சிறையில் தனியாக தங்கவைக்கப்படுவதற்கான உரிமை
    போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை
    துணிமணிகள்,படுக்கை, போதிய உணவு,தண்ணீர், மருத்துவவசதி பெற உரிமை
    பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை
    கொடூரமான, கேவலமான தண்டனைகளிவிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
    அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை
    குடுமு;பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதம் தொடர்பு, நேர்காணல் மூலம்)
    வெளி உலகச் செய்திகளைத் தொடர்ந்து பெறுவதற்கான உரிமை
    சிறச்சாலையில் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை
    மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை
    சொந்தச் சொத்துக்களை வைத்துக் கொள்வதற்கான உரிமை
    பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

நன்றி: Samasri Deshamaniya  P.Srikanth,
            Eastern Province Coordinator,
            Human Development Organization (HDO),
            Sri lanka.