[Untitled]‎ > ‎

பெண்கள் உரிமையும் தற்கால நிலையும் - செல்வி. லோகராஜா சிவலோஜினி

posted Jan 13, 2012, 10:16 AM by Web Admin   [ updated Jan 13, 2012, 10:22 AM ]
பெண்கள் உரிமையும் தற்கால நிலையும்

உலகெங்கும் பெண்கள் சம உரிமை கோரி நடாத்தும் போராட்டங்களும் ஏனைய நடவடிக்கைகளும் 21 ம் நூற்றாண்டு வரலாற்று செய்தியாகிவிட்டது. அரசாங்கங்களும் மக்கள் குழுக்களும் ஏனையோரும் பெருமளவில் ஏற்றுக் கொள்ளும் முகமாக பெண் உரிமை போராட்டங்கள் அமைந்துள்ளன.

                 பெண்கள் பத்திரிகை வாயிலாகவும் கருத்தரங்குகள் வாயிலாகவும் தங்கள் கொள்கைகளையும் எண்ணக்கருத்துக்களையும் காலத்திற்கு காலம் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பெண் விடுதலையின் பூரண தாற்பரியத்தையும் அவர்கள் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை. மதம் கலாசாரம், போன்றவற்றில் இருக்கும் காலத்திற்கொவ்வாத முரண்பட்ட பழமை வாதங்களை நாம் களைந்தெறியப் பின் நிற்கின்றோம் பயப்படுகின்றோம். ஊர்வலங்கள் வேண்டாம் ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. கூச்சல் கூக்குரல்கள் பயன்படாது ஆனாலும் போலி நியாயங்களையும் பெண்ணை அடிமையாக்கும் கலாசாரப் பண்புகளையும் நாம் மிக ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பழையன கழிய புதியன புகுத்தப்பட வேண்டும். நாகரீகம் வளர வேண்டும். இந்த ரீதியில் பெண்களைச் சிந்திக்க வேண்டும்.

இப் பெண் அடிமைத்தனத்தை இல்லாதொழிக்கும் முகமாக 1979 டிசெம்பர் 18 ம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் (CEDAW) பல நாடுகள் ஒப்பமிட்டுள்;ளன. இவை நடைமுறையில் காணப்படுகின்றனவா என நோக்கும் பேர்து அது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதன் சமவாயத்தின் முதலாவது உறுப்புரையானது மகளீர்க்கெதிரான பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றது. ஆனால்

                          இன்றைய அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் ஆணுக்குரிய பங்கு பெண்ணுக்கும் தரப்படுகிறதா? உத்தியோகங்களும்; சில ஆணுக்குரியன சில பெண்ணுக்குரியன என்று வகைப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. இவை இல்லாதொழிக்கப்பட வேண்டும். சமூதாய கட்டுப்பாடு பழம் பெரும் பண்பாடு என்ற அடிப்படையில் பெண்களின் நியாயமான கோரிக்கைகளும் அபிலாஷைகளும் புதைக்கப்படுகின்றன. பெண்களை எப்போதும் பின்னின்று இயக்கும் சக்தியாக வைத்திருப்பதை பெண்கள் அறிந்து அதற்கு மாற்றம் நிகழ வேண்டும். கதைகளும் கட்டுரைகளும் மாத வார இதழ்களும் பெண்களை இனக் கவற்சி சின்னமாக உபயோகித்து ஒரு விற்பனை பண்டமாக வைத்து வியாபாரம் செய்வது நிறுத்தப்;பட வேண்டும்.

(CEDAW) சமவாய 2-6ம் உறுப்புரையானது  பிள்ளை வளர்ப்பதை ஆண் பெண் இரு பாலாரும் மேற்கொள்ளப்பட வேண்டும். என கூறுகின்றது.
                           ஆனால் எத்தனை குடும்பங்களில் இந் நிலை காணப்படுகின்றது.  குடும்பம் என்ற சமூதாயப்பிரிவில் பெண்ணும் வேலைக்கு போவதால் ஏற்ப்படும் பிரச்சினைகளையும் ஒழுங்கீனங்களையும் பெண் ஒருத்தியே தாங்க வேண்டிய அநீதி காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் கணவர் வேலைக்கு சென்று வந்தால் அவருக்குரிய அனைத்து பணிவிடைகளையும் அவள் ஒருத்தியே செய்ய வேண்டும். ஏன் அவளும் அவரைப்போல வேலைக்கு சென்று வருபவள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் எழவில்லை  எனவே  ஆண்கள் கை கொடுத்து உதவி, வீட்டு வேலை. பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் தாமும் சம பங்கு எடுக்கும் எண்ணம் அவர்கள் மனதில் வளர வகை செய்ய வேண்டும்.

                            அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்ணிணம் சமையல் பிள்ளை வளர்ப்பு, கணவனைக் கவனித்தல் என்ற சிறுவட்டத்தினுள்ளேயே இயங்குகின்றது., இதிலிருந்து அவர்கள் வெளியே வந்து ஆத்ம ப+ர்வமாக நாட்டின் முன்னேற்றத்தில்  பங்கு கொள்ள வேண்டும். இந்த வகையில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்தப்பட வேண்டும்.
மகளீரை விபச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என (CEDAW) சமவாயம் கூறுகின்றது.
ஆனால் எத்தனை நாடுகளில் இது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. அன்றாட தினசரிப் பத்திரிகைகளை எடுத்தால் விபச்சார விடுதி முற்றுகை, விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது என்ற செய்திகளையே காண்கின்றோம். ஏன் இந்த நிலைமை இதனை சட்டப்படி தடுக்க முயற்சிப்பதை விட அவர்கள் ஏன் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதற்கான  காரணத்தை கண்டு தடுப்பதன் மூலமே வெற்றி காண முடியும்.

அரசாங்க கொள்கைகளை உருவாக்குவதிலும் முன்னெடுப்பதிலும் பங்கு பற்றவும் பெண்களிற்கு உரிமை உண்டு என (CEDAW) சமவாயம கூறுகின்றது.
                                 ஆனால ஒரு நாட்டின் ஏற்ப்படும் பல்வேறு முயற்சிகளிலும் பெண்களின் பங்கு கணக்கெடுக்கப்படுவதில்லை. பெண் என்ற ரீதியில் அவள் பின்னாலேயே வைக்கப்படுகின்றாள். கமத்தொழில் குடும்பத்தில் போஷாக்கு நிறைந்த உணவு கொடுத்தல் போன்ற பெரும் தொழில்கள் சேவைகள் என்றே கணக்கிடப்படுகின்றன. இந்த மனப்பான்மை மாறி பெண்ணின் சக்திக்கு மதிப்புக் கொடுக்கப்படல் வேண்டும். இந்த ரீதியில் பெண்களது பிரச்சினைகளிற்கு திர்வு காண பெண்கள் முன்வர வேண்டும்

வீரப் பெண்ணும் தீரப் பெண்ணும் பாரதி கண்ட புதுமைப் பெணணும். தமிழ் இலக்கியத்திலே நின்று விட்டார்கள் யுத்த களத்திற்கு கலங்காமல் மறப்பண்புடன் தன் ஓரே மகனை அனுப்பி வைத்த பொண்ணும் அரசனுடன் வழக்குரைத்து தன் கணவணைக் குற்றவாளியல்ல என்று நிருபித்த கண்ணகியும் ஏட்டை அலங்கரிக்கும் பெண்களாகவே இருக்கின்றனர். சமூதாயப் பெண்கள் அச்சமாக மடமை பொருந்தியவர்களாக நாணமுடையவர்களாக  அநீதி கண்டு வாய் மூடி மௌனமாகக் கண்ணீர் சிந்தும் பதுமைகளாகவே இருக்கிறார்கள் ஏன் இந்த முரண்பாடு.

பெண் உரிமை பெண்ணக்கு சம சந்தர்ப்பம் என்பன போன்ற தத்துவங்களில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. சமூதாயத்தின் பல்வேறு அம்சங்கள்  இதில் தொக்கியுள்ளன. பெண்களை மட்டும் தாக்கும் பிரச்சினை அல்ல இது அவளது குடும்பம் குழந்தைகள், கணவன், அண்ணன்,தம்பி, தாய், தந்தையர் என்ற உறவு முறைகள் பல அதில் அடங்கியுள்ளன. இவ்வுறவு முறைகளை முற்றிலும் எதிர்த்துப் போராடி ஒரு பெண் சமத்துவ நிலையை அடையமுடியாது. பல பெண்களிற்கு எப்படித் தாங்கள் அடிமைப்பட்டுவிட்டோம். எனபது தெரியவில்லையோ அதே போல ஆண்களிற்கும் தாங்கள் அவர்களை  எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகின்றோம் என்பது தெரியவில்லை. பண்பாடு சமூதாய வழக்கங்கள் என்ற அடிப்படையிலேயே இந் நிலை தொடர்கின்றது. இதனால் ஆணாதிக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. ஆகவே பெண்ணிணத்தை தடடி எழுப்பி அவர்களின் நிலையை உணர்த்த வேண்டிய காலம் எழுந்துள்ளது. அதே போல் ஆண்களை அழைத்து ஏன் இந்த அநியாயம் ஏன ;இந்த அடக்கு முறை என கேட்க வேண்டும்.

தற்காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக சீதனக் கொடுமை காணப்படுகின்றது. சமூதாயத்தில் எத்தனையோ பெண்கள் வாழ முடியாமல் தங்களிற்குரிய சுதந்திரங்கள் பறிக்கப்பட்ட வறுமை நிலையில் அடங்கி கிடக்கின்றனர். ஒரு பெண் எவ்வளவுதான் படித்து பட்டம் பெற்றிருந்தாலும் சிறந்த கணவனை தேர்ந்தெடுப்பதற்கு சீதனமே தடையாக இருக்கின்றதை காணலாம்.

பெண்களின் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏராளம் விதவைகள். விவாகரத்து செய்யப்பட்டவர்கள், குழந்தைகள், இல்லாதவர்கள் என்ற பல வகைப் பெண்கள் சமூதாயத்தில ;நிலவுகிறர்கள், மனைவியை இழந்தவர்கள்,  தன் அந்தஸ்துகளை இழக்கவே மாட்டார்கள். அடுத்த நாளே மறு மணமும் புரிகின்றார்கள். அதே சமூதாயம் கணவனை இழந்த மனைவியை எவ்வாறு நடத்துகின்றது. ஒரு சுப காரியங்களிற்கு முன் நிற்க விடுவதில்லை. சமூதாயத்தில் ஓரத்திலே வைக்கப்படுகின்றாள். ஏன் இந்த அநியாயம், ஆண் மறு மணம் செய்தால் அதைப் பற்றி விமர்சிக்கயாரும் இல்லை அதே ஒரு பெண் செய்தால் எள்ளி நகையாட ஆயிரம் பேர் வருவார்கள்.

ஒரு பெண் பருவ வயதை அடைந்ததும் அவளிற்கான சுதந்திரங்கள் பறிக்கப்படும் சூழ்நிலையே தற்காலத்தில் காணப்படுகின்றது. அவளை வெளியிடங்களிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் அதே வயதில் ஆண்பிள்ளைகளை வெளியிடங்களிற்கோ தனது விருப்பபடியும் நடக்க  அனுமதிக்கப்படுகின்றான். ஏன் இந்த வேறுபாடு.

தற்போது தினசரிப் பத்திரிகைகளை புரட்டினால் பெண் தற்கொலை, பெண் பாலியல் துஷ்பிரயோகம், கணவன் அடித்ததினால் மனைவி காயம் போன்ற செய்திகளையே காண்கின்றோம்.

உதாரணமாக
•    2011.11.26 தினகரன் செய்தி – பண்டார வளையில் குடும்பத் தகராறு காரணமாக 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை கணவன் கத்தியால் வெட்டிக் கொலை.
•    2011.12.10 சுடர் ஒளி செய்தி – கிளிநொச்சியில் வீட்டில் தனிமையில் இருந்த 46 வயது பெண்னை இருவர் சேர்ந்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர்.
•    2011.11.25 தினகரன் செய்தி - மூதூரில் தமிழ் ஆசிரியை ஒருவர் பாடசாலை சென்ற பொழுது காட்டுப்பகுதியில் வைத்து இனம் தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

போன்ற செய்திகள் காணப்படுகின்றன.

எனவே பெண் உரிமை பற்றி பலரும் பலவிதமாக கூறிக்கொண்டே சென்றாலும் பெண் உரிமை பெண்களிற்கான சமத்துவம் என்பதில் விழிப்புணர்வு சமூதாயத்திற்கு தேவையே.

நன்றி:
செல்வி. லோகராஜா சிவலோஜினி (B.A),
Staff, HDO -Karaitivu.Comments