[Untitled]‎ > ‎

தேடு மனமே தேடு… கட-உள்ளே

posted Jan 19, 2012, 7:37 AM by Web Admin
சிலைகளில் இல்லை
செத்த வார்தைகளில் இல்லை
தேவாலயங்களிலோ மசூதிகளிலோ இல்லை
வெற்றுச் சடங்குகளில் இல்லை
வெறும் ஷப்த மந்திரங்களில் இல்லை
வேதங்களில் இல்லை – குர்ஆன்னில் இல்லை
தேடு மனமே தேடு
கடவுளை?
கட உள்ளே – காண்பாய்

மானுடமே தேடாதே கடவுளை – அவர்

மூடர்களின் கோயில்களிலில்லை
முனிவர்களின் காலடியில் இல்லை

கடவுள் நீ என்றே.

நன்றி: அ.சந்திரகாந்தன்
(வீதி அபிவிருத்தி அதிகாரசபை)
காரைதீவு


Comments