[Untitled]‎ > ‎

திருமண விரதம்..

posted Apr 1, 2012, 11:17 PM by Web Admin

திருமண விரதம்

ங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்கவேண்டும் இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகா விஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை அடையலாம்.

பங்குனி உத்தர நன்னாளில் சிறப்பு: இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்ததும், ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத் ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது, இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது. ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது. அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்தர நன்னாளில்தான்.

சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு இந்த பங்குனி உத்தரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான் மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள் இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.

அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனைப் படைப்பதாக கூறினார்.

பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார்.  இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமண மாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

Comments