[Untitled]‎ > ‎

திருமண யோகம் கைகூட உதவும் மன பொருத்தங்கள்..!

posted Sep 10, 2012, 10:06 AM by Web Team -A

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிரினங்களும் ஏதோ விதத்தில் நமக்கு பூர்வ ஜென்ம தொடர்புடையதாக இருக்கும். நமக்கு கிடைத்த தாய், தந்தை, சகோதரம், கணவன்/மனைவி, நட்பு இப்படி எல்லா உறவு நிலைகளும் முன் ஜென்ம தொடர்புடையவகளே.

பருவ வயதில் வந்து அமையும் பூர்வ ஜென்ம உறவுதான் திருமணம். முன் ஜென்மத்தில் மிக நெருங்கிய தொடர்புடைய ஒருவர் தான் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ அமைவார்கள்.

உடலில் உயிர் உரைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல, நல்ல இரு நபர்களின் கூட்டணி தான் சிறந்த இல்லற வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது.

1) ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளுதல் 2) விட்டுக் கொடுத்தல் போன்ற இந்த இரண்டு அம்சங்கள் தான் இல்லற வாழ்வில் வெற்றிகளை குவிக்கும். ஒரே லக்னம், ஒரே ராசியில் பிறந்தவர்களும் இந்த அமைப்புடையவர்களே.

எடுத்த எடுப்பிலேயே திருமணப் பொருத்தம் என்றாலே தினம், கணம், மகேந்திரம், ராசி, ராசி அதிபதி, ரச்சு, ஸ்திரீ தீர்க்கம், வேதை, வசியம், நாடிப்பொருத்தம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான ஜாதகங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது மறைமுகமாக கவர்ச்சிப் பொருத்தம் மேலோங்கி இருந்துவருகிறது.

சில ஜாதகங்களில் இந்த கவர்ச்சிப் பொருத்தம் தலை நிமிர்ந்து, விரைவில் திருமணத்தை நடத்திவிடுகின்றது. இதைத்தான் மற்றொரு வகையில் கிரகப்பொருத்தம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய வாழ்கையில் நடைமுறையில் பத்து (தசப்) பொருத்தத்தைவிட, கவர்ச்சிப் பொருத்தம் தான் பல திருமண வாழ்க்கையை நிச்சயிக்கிறது.

இந்த கவர்ச்சிப் பொருத்தம் பார்ப்பது எப்படி எண்பதை பார்ப்போம்.

சூரியன் ஆத்ம காரகன் ஆகும். சந்திரன் உடல், மனசுக்கு காரகன் ஆகும். செவ்வாய், பெண்ணின் காம உணர்வுக்கு காரக கிரகம். சுக்கிரன், ஆணின் காம உணர்வுக்கு காரக கிரகம் ஆகும்.

Comments