[Untitled]‎ > ‎

திருப்பழுகாமம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஆலயம்..

posted May 10, 2015, 11:44 AM by Web Admin   [ updated May 10, 2015, 11:57 AM ]
இலங்கை மணித் திருநாடு, கிழக்கிலங்கை, மண்முனை, புளியந்தீவு, பாடுமீன் மட்டுநகர், மட்டக்களப்பு.

நிலவளமும், நீர்வளமும், முக்கனிவளமும் காளைகளும் ஏர் உழவர்களும் கல்விக்கரசர்களும் கணிப்பாளர்களும், கலிங்க குலம், படையாட்சி குலம், பணிக்கர் குலம், போடி குலம், வேளாளர் குலம், செட்டி குலம் போன்ற இராச குகன் சிவகோத்தர் பூபால வன்னிமைகள் மேற்குறிப்பிடும் உலகிலுயர் குடி உயர்குல வம்சத்தினரும் இவர்களுக்கு ஊழியம் செய்யும் (18) சிறைகளும் ஒருங்கே பூர்வீக ஆதி பாரம்பரியம் மரபு கலாசாரம் பேணி செறிந்து வாழும் மண்ணில் பூர்வீக திருப்பணிகளின் பஞ்ச ஈஸ்வரம்களின் ஒன்றான ஸ்ரீ கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் திருப்பணியின் பால் பின்பற்றி திருப்பழுகாமத்தில் 1994ம் ஆண்டுகாலப்பகுதியில் திரு ஞானாபரனம் கேசகமூர்த்தி குழுவான ஐவரினால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஆலயம் என்பது தற்போது பாரம்பரியங்ளை தழுவிய அளவில் சைவசமயம் லிங்கவளிபாடு போன்றவையின் முக்கியம் பற்றி மக்களிடையே சென்றடையப்பண்ணும் கைங்கரியத்தில் விடாமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலயத்தின் பின்புறத் தோற்றம்..

ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஆலய தாபகர்கள்..

இந்த வகையில் 2015.04.24ம் திகதியில் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் பலரும் கலந்துகொள்ள ஆலய அறங்காவலர் சபையால் திருமுககம் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் ஆரம்பமான திருவிழா நவதின திருவிழாவும் தீர்த்தோற்சபத்துடன் நிறைவு பெற்றது. இதில் 2015.05.02ம் திகதி சனிக்கிழமை ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் பெருமானுக்கு பட்டெடுத்து வந்து சாத்தும் வைபவமும் நடைபெற்றது. இதில் விசேட அம்சமாகக் காணப்பட்ட உலகில் உயர் குடிக்குலவம்சமான கலிங்க குலம், படையாட்சி குலம், பணிக்கர் குலம், போடி குலம், வேளாளர் குலம், செட்டி குலம் போன்றவர்கள் பட்டு  சுமந்து வந்து பெருமானுக்கு சாற்றிய வைபவம் பெருவிழாக் கோலமாக காட்சியளித்தது.

ஆலயத்தின் பிரதமகுரு..
நிருவாக சபையினர்..

இத்தோடு இதில் ஆலய அறங்காவலர் திருப்பணி மன்றத்தால் கிராமங்களில் பாரிய அளவிலாக சைவ சமய ஆலய வழிபாட்டிலும் தின நல வரிசைகளிலும் பலனை எதிர்பாராது சேவையில் ஈடுபட்டவர்களுக்கு “திருப்பணிச் செம்மல்” என்ற பட்டத்தினை சூடி பாராட்டுப்பத்திரம் வழங்கியது விசேட அம்சமாகும். இவ்வாறாக ஆலயமும் ஸ்தாபகர்களும் சிவ தொண்டாற்றுவது பாராட்டத்தக்கவிடயமாகும். 

புதிதாக புனர்த்தானம் செய்யவுள்ள ஆலயத்திற்காக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சிவலிங்கம்...
தற்போதுள்ள மூலஸ்தானத்திலிருக்கும் சிவலிங்கம்..

இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பாக விளங்குவது "அன்னை தந்தை அன்னச்சத்திரமாகும்" இதில் திருவிழாக்காலங்களில் அன்னதானமும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறிப்பு : பாராட்டுப்பத்திரம் பெற்றவர்கள் விபரம்..

1. திரு. பூ. சுரேந்திரராசா - ஸ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலய வண்ணக்கர்.
2. இ.சாந்தலிங்கம் - ஸ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலய வண்ணக்கர்.
3. பா. சபாரெத்தினம் - ஸ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலய வண்ணக்கர்.
4. இ.கந்தசாமி - ஸ்ரீ மாவேற்குடா ஆலய வண்ணக்கர்.
5. மா.தில்லையம்பலம் - ஸ்ரீ மாவேற்குடா ஆலய வண்ணக்கர்.
6. ம.பஞ்சலிங்கம் - ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வண்ணக்கர்
7. ஆ.பிரபாகரன்  - ஸ்ரீ மாவேற்குடா ஆலய திருப்பணிச் சபை. 
8. வ.ஏனுகோபன் - ஸ்ரீ மாவேற்குடா ஆலய திருப்பணிச் சபை. 
9. அ.சிவரெட்ணராசா - ஸ்ரீ மாவேற்குடா ஆலய திருப்பணிச் சபை.
10. க.இராசரெட்ணம் - ஸ்ரீ மாவேற்குடா ஆலய திருப்பணிச் சபை.
11. திருமதி கோமளாதேவி - ஸ்ரீ மாவேற்குடா ஆலய திருப்பணிச் சபை.
12. சு.உதயகுமார் - ஸ்ரீ மாவேற்குடா ஆலய திருப்பணிச் சபை.
13. சா.முல்லைவாசன் - ஸ்ரீ வேம்படி நாகதம்பிரான் ஆலய வண்ணக்கர்.
14. நா.தருமலிங்கம் - ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வண்ணக்கர்.
15. வை. தெய்வன் - ஸ்ரீ கேணிக்கரை முன்னாள் வண்ணக்கர்.
16. சு.தவராசா - ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய வண்ணக்கர்.
17. நா. சுதாகரன் - ஸ்ரீ ஏரிக்கரைப் பிள்ளையபப் ஆலய வண்ணக்கர்
18. க.சதாசிவம் - ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரப்பிள்ளையார் ஆலய வண்ணக்கர்.
19. கி. சிவலோகன் - ஸ்ரீமாவேற்குடா ஆலய திருப்பணிச்சபை.
20. யோ. கோபிகாந்த் - தவிசாளர் காரைதீவு.


Comments