[Untitled]‎ > ‎

வரங்களை அள்ளித்தரும் ஒளவையார் விரதம்…

posted Sep 10, 2012, 10:11 AM by Web Team -A

அவ்வையார் தமிழ் போற்றும் பெண் புலவர் என்பது பலரும் அறிந்த செய்தி. புலவர்கள் நாட்டுப்பற்று நிறைந்தவர்கள் என்பதும் அரச குடும்பத்தையே வாழ வைத்தவர்கள் என்பதையும் சிறு சிறு கதை மூலம் படித்திருக்கின்றோம்.

அந்த வகையில் சந்ததியர்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தந்த ஒப்பற்ற வழிபாடு அவர் பெயராலயே அவ்வையார் வழிபாடு என அன்று முதல் இன்று வரை ஏன் என்றும் கடைபிடிக்க வேண்டிய வழிபாடுகளில் சிறந்ததாக அவ்வையார் வழிபாடு உள்ளது.

பெண்களின் வாழ்வில் வசந்தம் வர வேண்டும் என்பதற்காக தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழ் சொல்லுக்கு பொருள் சேர்க்கும் விதத்தில் இவ்விரத முறையை அருளினார்கள் அவ்வையார். உத்திராயண புண்ணிய காலத்தில் முதல் மாதமாக வரக்கூடியது தை மாதம்.

தை மாதத்தின் வெள்ளிக்கிழமை விரதம் பற்றி ஏராளமான பெண்கள் அறிந்திருந்தாலும் செவ்வாய்க்கிழமையின் பெருமை ஏனோ அதிகம் தெரிந்திருக்கவில்லை. பெண் பாகத்தில் இருந்து ஆண் பாகத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன் பெண்களின் வாழ்க்கையின் மருமலர்ச்சிக்கு வித்திடுகின்றார்.

செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படும் அவ்வையார் விரதம் பெண்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அள்ளித்தர வைக்கின்றது. பெண்கள் மனம் ஒன்றி தங்கள் குடும்ப வருமை நீங்க பிரார்த்திக்கும் வழிபாடு அவ்வையார் வழிபாடு.

இதில் உப்பு இல்லாமல் தயாரிக்கும் கொழுக்கட்டை பிரசாதத்தை மருநாள் (புதன் அதிகாலை) காலை உப்பு, காரத்தை தொடுவதற்கு முன்பு உட்கொள்ள வேண்டும் என்பது சிறப்பு விதி. தை மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளின் அந்தி சாய்ந்த பிறகு பெண்கள் மட்டுமே பங்கு பெறுவது இந்த அவ்வையார் வழிபாடுதான்.

சிறு குழந்தையாக இருந்தாலும் ஆண்கள் இப்பூஜையில் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆண்களுக்காக பெண்கள் வேண்டும் விரதம் அவ்வையார் விரதம். ஆண் சந்ததியர் வளர்ச்சி, ஆரோக்யம் ஆகியவற்றை பெற இப்பூஜை உதவுகின்றது.

Comments