04.05.22- மரண அறிவித்தல் அமரர்.தங்கராசா ஆசைராசா..

posted May 3, 2022, 5:53 PM by Habithas Nadaraja   [ updated May 3, 2022, 6:16 PM ]

காரைதீவை-8ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தங்கராசா ஆசைராசா (முகாமைத்துவ உதவியாளர் வலயக்கல்வி அலுவலகம் சம்மாந்துறை) 03.05.2022ம்திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (04.05.2022)ம் திகதி  மாலை 03.00 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
28.06.21- 22 ம் ஆண்டு நினைவஞ்சலி முத்துலிங்கம் கணேசகுமார்..

posted May 27, 2021, 6:55 PM by Habithas Nadaraja   [ updated May 28, 2021, 7:18 PM ]
22 ம் ஆண்டு நினைவஞ்சலி
             
 முத்துலிங்கம் கணேசகுமார்
       (தோழர் ராசிக்)

உண்மையும் உளச்சான்றும் உரமாகி
தண்ணளியும் தார்மீகமும் தாராளமாகி
கண்ணென தமிழர் உரிமை காக்க
மண்ணின் மீட்பு மைந்தனாய் உருப்பெற்று
வாலியொத்த வலிமை மிகு வீரனாய்
போராட்டக்களத்தில் புயலெனப் புகுந்த போது
போராட்டத்தை முடக்கியோரால் 
வஞ்சனையால் வஞ்சித்து வீழ்த்தினரே!
உன் ஆத்மா இறையடியில் நித்தியம் பெற இறைவனை 
இறைஞ்சுகின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
        
 குடும்பத்தினர் ..

19.05.21- மரண அறிவித்தல் அமரர் விபுலமணி.உயர் திரு. வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை..

posted May 19, 2021, 10:30 AM by Habithas Nadaraja

காரைதீவை-6ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விபுலமணி.உயர் திரு. வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை 
(ஓய்வு நிலை அதிபர்,சமாதான நீதவான்) 19.05.2021ம்திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (20.05.2021)ம் திகதி  காலை 08.00 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
07.03.21- மரண அறிவித்தல் அமரர் திரு.வீரக்குட்டி பத்மநாதன்..

posted Mar 7, 2021, 10:57 AM by Habithas Nadaraja   [ updated Mar 7, 2021, 4:26 PM ]

காரைதீவை-2ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.வீரக்குட்டி பத்மநாதன்  (உகந்தை மலை  ஸ்ரீ முருகன் ஆலய பொருளாளரும், காரைதீவு உகந்தை யார்த்திரிகர் சங்க ஸ்தாபகர்களுள் ஒருவரும், முன்னாள் மக்கள் வங்கி பாதுகாப்பு உத்தியோகர்த்தர்) 07.03.2021ம்திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (08.03.2021)ம் திகதி  காலை 10.00 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

31.07.20- மரண அறிவித்தல் அமரர் திரு.சுப்பிரமணியம் கந்தசாமி..

posted Jul 30, 2020, 6:04 PM by Habithas Nadaraja


காரைதீவை பிறப்பிடமாக கொண்ட அமரர் திரு.சுப்பிரமணியம் கந்தசாமி 26.07.2020 ம் திகதி அன்று  ஜேர்மனியில் காலமானார்.


19.06.20- மரண அறிவித்தல் அமரர் திருமதி சீனித்தம்பி கண்ணம்மை

posted Jun 19, 2020, 10:21 AM by Habithas Nadaraja   [ updated Jun 19, 2020, 10:27 AM ]

காரைதீவை-6ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சீனித்தம்பி கண்ணம்மை 19.06.2020ம் திகதி அன்று  காலமானார்.
14.06.20- மரண அறிவித்தல் அமரர் தம்பியப்பா தர்மலிங்கம்

posted Jun 14, 2020, 3:06 AM by Habithas Nadaraja

காரைதீவை-8ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.தம்பியப்பா தர்மலிங்கம் (இலங்கை சாரணி சங்க பிரதம ஆணையாளரும் இளைப்பாறிய அதிபர் பண்டாரவளை தழிழ் மத்திய கல்லுரி இளைப்பாறிய கல்வி அதிகாரியும் பண்டாரவளை ஓய்வு பெற்ற ஆங்கில விரிவுரையாளர்(சப்ரகமுவ பல்கலைக்கழகம்)14.06.2020ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (14.06.2020)ம் திகதி  காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


31.05.20- மரண அறிவித்தல் அமரர்.கண்ணப்பன் அருள்வண்ணன்

posted May 30, 2020, 6:34 PM by Habithas Nadaraja

காரைதீவை-7ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கண்ணப்பன் அருள்வண்ணன் (உதவி பிரதம சிறைச்சாலை அதிகாரி, சிறைச்சாலைகள் திணைக்களம் திருகோணமலை)30.05.2020ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (31.05.2020)ம் திகதி  காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


29.05.20- 21ம் ஆண்டு நினைவு தினம் (29.05.2020) அமரர். முத்துலிங்கம் கணேசகுமார்.

posted May 28, 2020, 6:55 PM by Habithas Nadaraja

21ம் ஆண்டு நினைவு தினம் (29.05.2020) அமரர். முத்துலிங்கம் கணேசகுமார்.

தரணி விட்டு நீ மறைந்து
தசாப்தங்கள் இரண்டானாலும்
மறையாது என்றும் மறக்கொணாது
மறவனே! உன் தீர நினைவுகள்.

நீங்கா நினைவுகளுடன்..
- குடும்பத்தினர். -


11.12.19- முப்பத்தொராவது ஆண்டு நினைவஞ்சலி திருமதி சோதியம்மா சபாபதி

posted Dec 10, 2019, 7:32 PM by Habithas Nadaraja


முப்பத்தொராவது ஆண்டு நினைவஞ்சலி திருமதி சோதியம்மா சபாபதி

பேர் சொல்லும் பிள்ளைகளை பெற்றடுத்து மகிழ்ந்து
பார் போற்றிட வளர்த்து பண்போடு கல்வியை ஊட்டி
ஊர் மெஞ்சிட அவர்களை உயர் பதவிகளில் உயர்த்தி
மார்தட்டி வாழ்ந்திருந்த மாண்மிகு எம் மாதாவே
மண்லுலகு விட்டு நீ பிரிந்து ஆண்டுகள் முப்பதுதானாலும்
மறையாது தாயே உன் நினைவுகள்..

       என்றும் அன்புடன் குடும்பத்தினர்
1-10 of 413