01.03.17- மரண அறிவித்தல் - அமரர். சிவானந்தம் தர்மிகன் ..

posted Mar 1, 2017, 5:11 PM by Habithas Nadaraja   [ updated Mar 1, 2017, 5:41 PM ]
காரைதீவு -  01ம் பிரிவைச் சேர்ந்த  சிவானந்தம்  தர்மிகன்  (சிறைச்சாலை  உத்தியோகத்தர் 
(27.02.2017) அன்று காலமானார்.

சிவானந்தம்  சிவயோகம் தம்பதியினரின் அன்பு மகனும், சமிந்தன், மிதுர்ஜா
 ஆகியோரின் பாசமிகு சகோதரன்னுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (02.03.2017) மாலை 3 மணியளவில் காரைதீவு  இந்துமயானத்தில் இடம்பெறும். 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மனம்வெந்து
துடிக்குதய்யாவுன்
மரணச்செய்தியதை
கேட்டு......

உன் முகம் 
முன்வந்து நிக்குதய்யா
உன் நட்பதை
நினைந்து......

காவலனாய்
சென்றவுனை
காலனவன்
கூட்டிச்சென்றானோ......?


புரியாத புதிருன்
மரணம் பொய்
எனவாகிடாதோ......?

புன்னகையோடு
பதில்கூறிடுமுன்
எழில்முகம்
    மறந்திடுமோ..........?

உன்னிழப்பு
பேரிழப்பிதை
எங்கனம் நாம்
தாங்குவதாே.....?

வீரத்தமிழூராம்
காரை மண்ணில்
இனி நீயுமொரு 
வீரனன்றோ....?

நாமுள்ளவரையும்
நம் நட்புவாழும்
நீயும் வாழ்வாயினி எம்
நினைவாக 
நிழலாக
நிஜமாக 
நிலையாக........


          
               
       காரைதீவுநீயுஸ் .கொம்


Comments