03.12.2013 - மரண அறிவித்தல்..(இணைப்புடன்)

posted Dec 3, 2013, 9:55 AM by Web Admin   [ updated Dec 5, 2013, 1:33 AM ]
காரைதீவை பிறப்பிடமாகவும் மண்டூரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஸ்ரீசித்தானைக்குட்டிஜீ - கிரிஜா அவர்கள் 01.12.2013 அன்று காலமானார்.

அன்னார் ஸ்ரீசித்தானைக்குட்டிஜீ, சகுந்தலா அவர்களின் அன்பு மகளும், கிருஷ்ணபிரபா (பொறியியலாளர்) மற்றும் கிருஷ்ணபிரியா (தாதியர் பயிற்சி பாடசாலை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நேற்று(02.12.2013) பிற்பகல் அன்னாரின் மண்டூர் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக மண்டூர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தாயின் மடியில்: 30.05.1994
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "கண்ணீர் அஞ்சலி "

வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கி
விட்டுச் சென்ற வாடா மலரே..கிருஷா ....!

உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல -
உடைந்தது எங்கள் இதயமும் தான்...!
 
நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
நெஞ்சில் உயிர் வாழும் உறவே .......!

தன் கடன் பெற்றோற் காற்றி மலர்ச் சிறகில்
நீ வளர்ந்தாய் . இன்று மறைந்தாய் ....!

மண் கடல் வான் உளவும் மறவோமே...!

காலங்கள் கடந்து பிரிந்தாலும் ஆனைக்குட்டி  நண்பனின்
மகளுக்கு இன்றுநான்  கண்ணீரை சிந்த கிடைக்கும் எழுத்தால்
அழுகின்றேன்..மகளே ...கிருஷா...!. 

கொந்திராத்து காசுபதி மகன் குமாரோடு + குடும்பம்.-ஜெர்மனி.

 

Comments