04.02.16- மரண அறிவித்தல்: திருமதி. அழகம்மா - அருணாசலம்..

posted Feb 3, 2016, 4:20 PM by Liroshkanth Thiru
காரைதீவு 2ம் பிரிவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அழகம்மா - அருணாசலம் அவர்கள் 2016.02.03 அதாவது நேற்று புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி சீதைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், ஓய்வு பெற்ற அதிபர் அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், சண்முகம் பிள்ளை - மகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான தங்கராசா, செல்வராசா, இரத்தினசிங்கம் மற்றும் கனகசுந்தரம் (கக்கள் வங்கி கணக்காய்வுப் பிரிவு, கொழும்பு), ஆகியோரின்  அன்பு சகோதரியும், சுந்தரகுமார் (பிரதேச சபை திருக்கோவில்), சுந்தரேஸ்வரி (ஆதார வைத்தியசாலை , கல்முனை), சுந்தரராசன் (மக்கள் வங்கி, காரைதீவு), கிருஷ்ணராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும் அவார்.

அன்னாரின் பூதவுடல் 2016.02.04 அதாவது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் தகனக் கிரியை செய்யப்படும்.

தகவல் : குடும்பத்தினர்Comments