06.04.2014- அஞ்சலிகள்..

posted Apr 6, 2014, 7:47 AM by Web Admin   [ updated Apr 6, 2014, 11:48 PM by Unknown user ]
" கண்ணீர் அஞ்சலி " 
 
சகோதரன் தனிநாயகம் அண்ணன் அவர்களே ............. 
நான் சிறையிருந்து திருக்கோவில் நீதிமன்றம், 
விசாரணை என வரும்போதெல்லாம் என்னைக்காண 
உங்கள் தொழிலுக்கு அரைநாள் விடுமுறை 
கொடுத்து வந்து அன்று என்னை பார்த்தநாளில் 
 
நாம் பேசியதெல்லாம் இனத்தோடு தமிழின்பால்...... 
கொண்ட மோகமும் , அன்புமானாலும் 
இன்று புரியவில்லை....!! ஏன் ...? எதற்கு ....?
 
நான் ஊரில் இல்லையென அறிந்தே 
விண்ணுலகம் சென்றாயா ...? 
உனக்கு தவறென தெரிந்தும் நான் வந்தும் 
உன்னை நினைப்பேன் என்பதுகூட 
உனக்கு புரியல்லையா....?

எங்க நெஞ்சம் துடி துடிக்க......
நிம்மதி எங்களை .மறக்க .....- உங்களது 
மரணத்தால் நாங்கள் மரித்தோம் - இன்றும் 
கண்ணில் நீர் கசிகின்றது.....
உன் அன்பை  நினைத்து ..
மண்ணுலகைவிட்டு 
விண்ணுலகம் சென்றாலும்..... - 
உங்கள் நினைவுகளோடு...
என்றென்றும் உங்கள் நினைவில்
வாழும் சுற்றம்- நட்போடு 
 நாங்களும்  எங்களின் 
கண்ணீரை அஞ்சலி மலராக்குகின்றோம்....! 

கொந்துராத்து காசுபதி மகன் குமாரோடு 
குடும்பம்.....

Comments