07.12.15- ஈராண்டு நினைவஞ்சலி..

posted Dec 7, 2015, 8:55 AM by Liroshkanth Thiru
கலாபூசணம்
அமரர். திரு. நோணிஸ் அப்பு. மணிவாசகன்
(வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னாள் உத்தியோகத்தர், ‘மகாசக்தி’ சிக்கன கூட்டுறவு சங்க, நிறுவன முன்னாள் தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர், சமாதான நிதவான்)

                               மண்ணில்: 1944.11.09                                                                                                           விண்ணில்: 2013.12.08

உடம்பினுள் உயிராய்
உதிரத்தில் செங்குருதியாய்
மூச்சினிலே சுவாசமாய்
பேசும் பேச்சினிலே வார்த்தையாய்

எங்கள் ஆவி அடங்கும் வரை
காண்பதெல்லாம் நீங்களே! அப்பா
காவியமாய் வடித்திட எண்ணி
கதறுகிறது உள்ளம் ஐயா - இனி

காணவருமோ ஒரு வினாடி
கள்ளமில்லா உங்கள் பொன்முகத்தை 
கண் இமைக்கும் நொடியிலேனும் 
கண்ணோரம் வாங்கள் அப்பா…

மறைந்தாலும் இன்னும், அப்பா…
மாறவில்லை எங்கள் துயரம் 
மறந்து தனும் ஒரு வினாடி 
மறந்து தூங்க முடிவதில்லை

வருடங்கள் இரண்டானாலும்
வந்தவர்கள் சாந்தி சொன்னாலும்
வறண்ட எங்கள் இதயங்களில் - இனி 
வருவதுண்டோ உயிர் ஒருக்கால்?

வாடி நிற்கின்றோம், செல்லமே அப்பா!
வரவே வேண்டும் எங்கள் அப்பா…

ஆறத்துயரோடும் மறவாத நினைவோடும்
உங்களுக்காய் வாழும், பிரார்த்திக்கும், 

அன்பு மனைவி, மக்கள், மருமகன்மார், பேரப்பிள்ளைகள்
  
நாவலர் வீதி, அக்கரைப்பற்று 7/3Comments