12.12.16- மரண அறிவித்தல்- அமரர்.பொன்னையா பரமேஸ்வரி..

posted Dec 11, 2016, 6:31 PM by P Niroshanதிருமதி. பரமேஸ்வரி சிவசிதம்பரம்
6-10-1933   -    11-12-2016காரைதீவு முன்னாள் சேர்மனும் ஓவசியருமான, காலஞ்சென்ற பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகுமூத்தமகளும் காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி மயிலம்மா தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற டாக்டர் சிவசிதம்பரத்தின் அன்புமனைவியும் ஆகிய திருமதி பரமேஸ்வரி சிவசிதம்பரம் அவர்கள் 11-12-2016 ஞாயிறுஅன்று காரைதீவில் தனது இல்லத்தில் காலமானார்.

அன்னார் இந்திராணியின் பாசமிகு தாயாரும் திரு. த. சண்முகரெத்தினம் (ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்) அவர்களின் அன்புமாமியும் காலஞ்சென்றவர்களான டாக்டர் தம்பிராஜா, ஞானரெத்தினம்(ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர்-மதுறுஓயா) கருணாகரன் மற்றும் லெட்சுமி(கனடா), சரஸ்வதி, மதுரநாயகம்(ஓய்வுநிலை தாதியர் உத்தியோகத்தர் மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்றவர்களான சுவாமி நடராஜானந்த ஜீ, தெய்வானப்பிள்ளை, அழகுரெத்தினம், டாக்டர். பரசுராமன், டாக்டர் திருநாவுக்கரசு, நல்லம்மா மற்றும் இராசலெட்சுமி, சறோஜினிதேவி(ஓய்வுவிநிலை இலங்கைவங்கி உத்தியோகத்தர்)ஆகியோரின் அன்புமைத்துனியும் லோஜினி, லோசாந்தன்(வெளிக்கள உத்தியோகத்தர்-பிரதேசசெயலகம்-ஆலையடிவேம்பு)ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் டாக்டர்.உதயகுமார்(ஆதாரவைத்தியசாலை-காத்தான்குடி) சுகிர்தா(தாதியர் உத்தியோகத்தர்-கல்முனை வைத்தியசாலை) ஆகியோரின் அன்புப்பாட்டியும் சர்னுஜன், சர்மியன் நிலக்க்ஷன் அக்சயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

மற்றும் திரு. இராஜேந்திரா (ஓய்வுநிலை இலங்கைவிமானசேவை பிரதம உத்தியோகத்தரும்) திரு.சண்முகரெத்தினம் (ஓய்விநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்) அருள்மணிதேவி விவேகானந்தன் அருட்சோதி(ஓய்வுநிலை கிராமசேவை உத்தியோகத்தர்) காலஞ்சென்ற சோதிராஜா (பொறியிலாளர் இலங்கை விமானசேவை) பாஸ்கரன், அனுராதா, யமுனாதேவி, நவயுகன் ஆகியோரின் மாமியும் சிவசக்தி ஞானமுத்து(கனடா), ஜெயரமணி ஆனந்தமகேஸ்வரன்(டென்மார்க்), டாக்டர்.கௌரிசங்கரன் (போதனாவைத்தியசாலை மட்டக்களப்பு), உமாசங்கரன் (பிரதிமுகாமையாளர் மக்கள்வங்கி-காரைதீவு), சுகந்தினி இளங்குமரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் இன்று (12-12-2016) திங்கட்கிழமையன்று பி.ப. 3.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நடைபெறும். இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு: திரு. த. சண்முகரெத்தினம் - 067 222 2407 திரு. ச. லோசாந்தன் - 077 644 5522


தகவல்: அஜந்தா ஞானமுத்து (கனடா)
Comments