13.02.2014- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Feb 13, 2014, 8:26 AM by Web Admin   [ updated Feb 13, 2014, 11:08 PM by Unknown user ]
கடந்த 14.02.2013 அன்று அமரத்துவமடைந்த காரைதீவு-02ம் பிரிவைச் சேர்ந்த அமரர் அரசம்மா தில்லையம்பலம் அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் நாளை இடம்பெறவுள்ளதுடன் அன்னாரின் திதியுடனான அமுது படையல் பிறிதொரு தினத்தில் உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 
தகவல்: சஞ்ஜீவன்

மரண அறிவித்தலின் பிரதி:

நடராஜானந்தா வீதி, காரைதீவு- 02ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.அரசம்மா.தில்லையம்பலம் அவர்கள் இன்று (14.02.2013) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மார்க்கண்டு தில்லையம்பலம் அவர்களின் மனைவியும், உருத்திரன் (நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம்-காரைதீவு), தில்லைராணி, தேவதாசன் (வனப்பரிபாலன திணைக்களம், மட்டக்களப்பு), கண்ணதாசன் (நில அளவையாளர், அவுஸ்திரேலியா), 
நளினி (ஆசிரியை, விபுலானந்தா மத்திய கல்லூரி-காரைதீவு) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

 


Comments