14.02.2013- மரண அறிவித்தல் (ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Feb 13, 2013, 11:08 PM by Web Team -A   [ updated Feb 14, 2013, 11:20 AM ]
நடராஜானந்தா வீதி, காரைதீவு- 02ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.அரசம்மா.தில்லையம்பலம் அவர்கள் இன்று (14.02.2013) காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற மார்க்கண்டு தில்லையம்பலம் அவர்களின் மனைவியும்,
உருத்திரன் (நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம்-காரைதீவு), தில்லைராணி,
தேவதாசன் (வனப்பரிபாலன திணைக்களம், மட்டக்களப்பு), கண்ணதாசன் (நில அளவையாளர், அவுஸ்திரேலியா),
நளினி (ஆசிரியை, விபுலானந்தா மத்திய கல்லூரி-காரைதீவு) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(15.02.2013) காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் தகனக்கிரிகைக்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர் (வினோ)
 

 
 
Comments