15.02.15- மரண அறிவித்தல்..

posted Feb 14, 2015, 11:28 PM by Liroshkanth Thiru   [ updated Feb 14, 2015, 11:30 PM ]
சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் காரைதீவு 1ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. நல்லரெத்தினம் பத்மநாதன் (ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத்திணைக்கள உத்தியோகத்தர்) அவர்கள் 14.02.2015 சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லரெத்தினம் (அதிபர்) , பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும் கமலாதேவியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற வினோத், கேதிஸ் (ஆசிரியர், புகாரி மகாவித்தியாலயம், கிண்ணியா ), வசந்த் (விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நாவிதன்வெளி), டிலக்ஷன் (HNB, திருகோணமலை), மதிராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 
அன்னாரின் தகனக்கிரியைகள் இன்று(15) பிற்பகல் 4 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும். 

தகவல்- குடும்பத்தினர் 
Comments