15.07.2013 - மரண அறிவித்தல்..(பதிவேற்றத்துடன்)

posted Jul 14, 2013, 9:31 PM by Web Team -A   [ updated Aug 23, 2013, 7:57 AM ]
காரைதீவு-02ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. செல்வச்சுவந்தரம் தங்கராசா (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் 15.07.2013  இன்று காலை காலமானார்.

அன்னார், தவமலர்(அவுஸ்திரேலியா), தேவதாசன்(அவுஸ்திரேலியா), கண்ணதாசன்(லண்டன்), காந்திதாசன்(லண்டன்), ஜெயமலர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார். (மேலதிக தகவல்கள் படங்களுக்கு கீழே)

எதிர்வரும் வியாழக்கிழமை 18.07.2013 அன்று  பி.ப 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் தனக்கிரிகைகளுக்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார, உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
Telephone cont: Kanthi- 00447405025931
 


    கண்ணீர் அஞ்சலி 

திருமதி பாக்கியம் தங்கராசா அவர்களின் பிரிவிலிருந்து
தாங்கொணா துயரத்தில் தவித்திருக்கும் அனைத்து மக்கள்,
உறவுகள், நண்பர்களோடு நாங்களும் சேர்ந்திட முடியா
தூரத்திலிருந்து எழுத்தால் எங்கள் குடும்பத்தினர்களின்
அஞ்சலியை இணைத்து, கண்ணீராக்குகின்றோம்.

இதயத்தில் உள்ள ஈரத்தால், ஏற்பட்ட  கண்ணீர் மழையில்
எழுத வசனமின்றி எழுத கிடைத்த சொல்லாக ....

"" இமயம்போல் உயந்தவரே !                  
இமைபோல் பலரை காத்தவரே !!
இதயம் பல வாழ்ந்தவரே !!!
இமைப்பொழுதும் எம் நெஞ்சில் வாழ்பவரே !!!
அன்னை பாக்கியமே...
மீண்டும் பிறந்திட வாராய்......
காத்திருக்கிறோம்.........""

கொந்திராத்து  காசுபதியின் மகனாக
குமாரோடு குடும்பம். ஜெர்மனி.


Comments