16.03.2013 - மரண அறிவித்தல்

posted Mar 15, 2013, 6:45 PM by Web Team -A   [ updated Mar 16, 2013, 3:31 AM ]
காரைதீவு-01ம் பிரிவை பிறப்பிடமாகவும் செங்கலடி- கொம்மாதுறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சீதப்பிள்ளை சின்னையா அவர்கள் 16.03.2013 இன்று காலமானார்.
 
 
அன்னார் காலஞ்சென்ற சின்னையா அவர்களின் மனைவியும், கலஞ்சென்ற சபாபதி, கலஞ்சென்ற கணேசன், சரவணமுத்து(ஓய்வு பெற்ற வைத்தியசாலை ஊழியர்), பாக்கியராசா(ஓய்வு பெற்ற வைத்தியசாலை ஊழியர்), சரவணமுத்து(வைத்தியசாலை ஊழியர்), ஆறுமுகம், ஏரம்பமூர்த்தி, தவமணிதேவி, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
 
அன்னார் திரு. ச. மகேஸ்வரன்(காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய தர்மகத்தா) அவர்களின் சிறிய தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(16.03.2013) பிற்பகல் 05.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக செங்கலடி- கொம்மாதுறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: ச.மசேஸ்வரன்
 
 
 
Comments