17.12.14- கண்ணீரில் நினைவஞ்சலி..

posted Dec 17, 2014, 2:47 AM by Unknown user

எங்கள் பெரியபுள்ள சீனியம்மாவே.......

நீசென்-   றடைந்து பெற்றாய் இன்பம் 
யாமிங்-   குழல்வதோ நீள்துயர் துன்பம் 

நீஅடைந்-  தனையே நீள்சொர்க்க உலகம் 
யாமடைந்து  துன்புறு-  வதோஇடர்  உலகம் 

நீஅடையத்  துடித்து ஏகினாய் நிம்மதி 
யாமும் தேடுகிறோம் அப்பாழ்  நிம்மதி 

நிம்மதி-  யாய்நீ  துயில்கிறாய்  அங்கே 
எம்மவர் அறியா துழல்கிறோம் இங்கே

நீ 90 வயதை தாண்டி விரைவாய் சென்றிட
பட்டு மாய்கிறோம் புவியில் சோர்ந்திட 

பொய்ம்மை உலகில் அனாதை-  யாக
மெய்ம்மை  எய்திட முடியா-  மலேயே

கண்ணீர் அஞ்சலி-  தனையே
மண்டும் கண்ணீர் கொண்டே நல்குவமே...! 

கொந்திராத்து காசுபதி மகன் குமாரோடு +குடும்பம் 
Comments